பிப்.26-இல் அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

அயோத்தி வழக்கை, வரும் 26-ஆம் தேதி விசாரிப்பது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண்
பிப்.26-இல் அயோத்தி வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை


அயோத்தி வழக்கை, வரும் 26-ஆம் தேதி விசாரிப்பது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை முடிவு செய்தது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்தே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ.நஸீர் ஆகிய 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரிக்கவுள்ளது.
முன்னதாக, அயோத்தி வழக்கில் கடந்த மாதம் 29-ஆம் தேதி விசாரணை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நீதிபதி பாப்தே அன்றைய தினத்தில் விடுமுறை என்பதால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி வழக்கின் மனுதாரர் அனைவருக்கும், உச்சநீதிமன்ற பதிவாளர் அனுப்பியுள்ள அறிவிக்கையில், வரும் 26ம் தேதியன்று வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டில் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மொத்தமுள்ள 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வஃபு வாரியம், நிர்மோகி அகோரா, ராம் லல்லா ஆகிய மூன்று தரப்பினரும் சமமாக பிரித்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.
ஆனால், அதை எதிர்த்து 14 மேல்முறையீட்டு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றின் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை தவிர்த்து, அதைச் சுற்றி கையகப்படுத்தப்பட்ட 67 ஏக்கர் நிலங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த மாதம் 27ம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 
இத்தகைய சூழலில், வழக்கு 26ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com