பினராயி விஜயனின் பாதுகாப்பு வா‌கனம்‌‌ மோதி 4 பேர் ‌காயம்

 கேரள முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். 
பினராயி விஜயனின் பாதுகாப்பு வா‌கனம்‌‌ மோதி 4 பேர் ‌காயம்

 
கேரள முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர். 

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளித்ததை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பினர். 

இந்நிலையில், சபரிமலையில் கனகதுர்கா என்ற பெண்கள் இருவர் சாமி தரினம் செய்ய அரசு உதவியதைக் கண்டித்து கேரளாவில் காங்கிரஸ் கட்சி கருப்பு தினம் அனுசரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே, முதல்வர் பிரனாயி விஜயன், மதிய உணவுக்கான வீட்டிற்கு திரும்பியபோது, ​​அவருக்கு காங்கிரஸ் கட்சியனர் கருப்புக் கொடி காட்ட முயன்றனர். 

அப்போது முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் காங்கிரஸ் தொண்டர் 4 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 2 பேர் மருத்துவக் கல்லூரி மருத்துவனையிலும், 2 பேர் அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தோள்பட்டை, கைகள் மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

இது திட்டமிட்டு காங்கிரஸ் கட்சியினர் மீது வாகனத்தை ஏற்றியுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அந்த 2 பெண்களும் ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று விடப்படவில்லை. பக்தர்களுடன்தான் அவர்களும் மலையேறி சென்றனர். அவர்களுடன் வந்த பக்தர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பினராயி விஜயன் விளக்கம் அளித்துள்ளார். 

வன்முறை காரணமாக கேரளத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்ததாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி குற்றம்சாட்டி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com