வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்: பிரகாஷ் ஜாவடேகர்  

வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.  
வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்: பிரகாஷ் ஜாவடேகர்  

புது தில்லி: வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.  

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தும் சமீபத்தில் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் வரும் கல்வியாண்டு முதல் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் 10% இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டம், வரும் கல்வியாண்டில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் அமல்படுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளார். 

இதன்மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 2019 கல்வியாண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com