எல்லையில் போர் இல்லாவிட்டாலும் ராணுவத்தினர் பலியாவது தொடர்கிறது: மோகன் பாகவத் வேதனை

எல்லையில் போர் இல்லாவிட்டாலும் ராணுவத்தினர் பலியாவது தொடர்கிறது: மோகன் பாகவத் வேதனை

நமது நாட்டின் எல்லையில் போர் எதுவும் நடைபெறவில்லை; எனினும், ராணுவ வீரர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்


நமது நாட்டின் எல்லையில் போர் எதுவும் நடைபெறவில்லை; எனினும், ராணுவ வீரர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் வேதனைதெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:
நமது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு விடுதலைக்காக உயிரைத் தியாகம் செய்யும் நிலை இருந்தது. சுதந்திரத்துக்கு பின், போர்க் காலங்களில் மட்டும் எல்லைகளில் உயிர்த் தியாகங்கள் நிகழ்ந்தன. ஆனால், இப்போது போர் இல்லாவிட்டாலும், எல்லையில் ராணுவ வீரர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது. நாம் நமது பணியை முறையாக செய்யாததே இதற்கு காரணம். இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், நமது நாட்டை தலைசிறந்த தேசமாக மாற்றவும் நாம் ஒவ்வொருவரும் அயராது பாடுபட வேண்டும். அரசு, காவல்துறை, ராணுவம் ஆகியவற்றைக் கடந்து ஒட்டுமொத்த சமூகமும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் மோகன் பாகவத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com