இந்தியா

மக்களவைத் தேர்தலில் பிராந்திய கட்சிகளே முன்னிலை வகிக்கும்: மம்தா பானர்ஜி

DIN


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பிராந்திய கட்சிகளே முன்னிலை வகிக்கும்; ஆளும் பாஜகவுக்கு 125 இடங்களில் கூட வெற்றி கிடைக்காது என்று மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் வரும் 19-ஆம் தேதி திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாகவும் இந்த பொதுக் கூட்டம் கருதப்படுகிறது. 
இதில் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி பங்கேற்கவில்லை. எனினும், அக்கட்சி சார்பில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுக் கூட்டம் நடைபெறும் மைதானத்தில் மேற்கொள்ளப்படும் பணிகளை வியாழக்கிழமை பார்வையிட்ட மம்தா பானர்ஜி கூறியதாவது:
வரும் மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு முடிவு கட்டுவதாக அமையும். தேர்தலில் பிராந்திய கட்சிகளே முன்னிலை வகிக்கும். பாஜகவுக்கு 125 இடங்களில் கூட வெற்றி கிடைக்காது. பாஜகவைவிட அதிக தொகுதிகளில் பிராந்தியக் கட்சிகள் வெற்றி பெறும். பிராந்திய கட்சிகளே தேர்தல் வெற்றியை முடிவு செய்யும் சக்தியாகத் திகழும்.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பாஜக சாராத அனைத்து கட்சிகளும் எங்கள் கட்சி நடத்தும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்க இருக்கின்றன. முன்னாள் பிரதமர், இன்னாள் முன்னாள் முதல்வர்கள் என பல முக்கியத் தலைவர்களின் சங்கமமாக இது இருக்கும் என்றார் மம்தா பானர்ஜி.
முன்னாள் பிரதமர் தேவெகெளடா, அவரது மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான பினராயி விஜயனுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தபோதிலும், அவர் அதனை ஏற்கவில்லை. 
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுக்கும் இடதுசாரி கட்சிகளும் இடையேதான் போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT