ராமர் கோயில் கட்டுவோம் என வாக்குறுதி அளித்தால் காங்கிரஸுக்கு ஆதரவு: பாஜக-வுக்கு விஹெச்பி எச்சரிக்கை

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என விஹெச்பி தலைவர் அலோக் குமார் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக விஷ்வ ஹிந்து பரிக்ஷத் தலைவர் அலோக் குமார் மேலும் கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதாக வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தால், நாங்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்போம். இதில் காங்கிரஸ் மட்டுமல்லாது ராமர் கோயில் கட்டுவதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கும் எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு அளிக்கப்படும்.

அதுபோன்று ஸ்வயம்சேவக்கைச் சேர்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு அக்கட்சியில் உள்ள தடைகள் நீக்கப்பட வேண்டும் என்றார். மேலும், ராகுல் தன்னை கௌல் பிராமணர் என்று கூறியதற்கு, ஒருவர் பூணூல் போட்டுக்கொண்டால் மட்டும் பிராமணர் ஆக முடியாது என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com