அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (54), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டி


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் (54), அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக திங்கள்கிழமை அறிவித்தார். 
அதிபர் டொனால்ட் டிரம்பை கடுமையாக விமர்சித்து வரும் கமலா ஹாரிஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் 4-ஆவது போட்டியாளர் ஆவார். அவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், அமெரிக்க நாட்டின் முதல் பெண் அதிபர் என்ற சாதனை படைப்பதுடன், வெள்ளையர் அல்லாத முதல் பெண் அதிபர் என்ற பெருமையையும் பெறுவார். 
திங்கள்கிழமை சமூக வலைதளத்தில் வெளியிட்ட விடியோ பதிவில் அவர் குறிப்பிட்டதாவது: மகாத்மா காந்தியை தனக்கான உத்வேகமாகக் கொண்ட, அமெரிக்க கருப்பின போராளி மார்டின் லூதர் கிங்கின் பிறந்த நாளான இன்று, அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முடிவை அறிவிப்பதில் பெருமை கொள்கிறேன்.
சுயநலமின்றி தங்களுக்காக கடுமையாகக் போராடக் கூடியவரை அமெரிக்க மக்கள் எதிர்நோக்கியுள்ளனர். அதற்காக நான் தயாராகிவிட்டேன் என்று கமலா ஹாரிஸ் குறிப்பிட்டிருந்தார். 
மேலும், கலிஃபோர்னியா மாகாணம், ஓக்லாந்தில் வரும் 27-ஆம் தேதி நடைபெற இருக்கும் பேரணியில் கலந்துகொள்ளுமாறு ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கமலா ஹாரிஸின் தாயார் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராவார். அவரது தந்தை ஜமைக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவர். 
கலிஃபோர்னியா மாகாணத்திலிருந்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக 2 ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ், கருப்பினத்தைச் சேர்ந்த முதல் மேலவை உறுப்பினர் (கலிஃபோர்னியா) என்ற பெருமைக்கு உரியவராவார்.
அத்துடன், அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கர் என்ற பெருமையும் பெற்றுள்ளார்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாகவும் கமலா ஹாரிஸ் பணியாற்றியுள்ளார். அந்த மாகாணத்தின் முதல் இந்திய வம்சாவளி அட்டர்னி ஜெனரல் என்ற பெருமையை பெற்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com