கட்டாயம் 7 மணி நேரம் தூங்க வேண்டும்.. யாருக்கு யார் சொன்னது என்று பார்க்கலாம்!

ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஆனால் எப்போது செல்போன் எனும் பேய் நம்மை ஆட்கொண்டதோ அப்போதே இந்த விஷயங்கள் எல்லாம் காற்றில் போய்விட்டது.
கட்டாயம் 7 மணி நேரம் தூங்க வேண்டும்.. யாருக்கு யார் சொன்னது என்று பார்க்கலாம்!

அஜ்மீர்: ஒரு நாளைக்கு குறைந்தது 7 மணி நேரம் தூங்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஆனால் எப்போது செல்போன் எனும் பேய் நம்மை ஆட்கொண்டதோ அப்போதே இந்த விஷயங்கள் எல்லாம் காற்றில் போய்விட்டது.

அதனால்தான், தங்கள் துறையில் பணியாற்றும் நபர்களுக்கு இதனை ஒரு அறிவுறுத்தலாகக் கூறும் நிலை இன்று ராஜஸ்தான் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் காவல்துறை வெளியிட்டிருக்கும் புதிய அறிவுறுத்தல் அறிக்கையில், காவலர்கள் அனைவரும் தினமும் குறைந்தது 7 மணி நேரம் கட்டாயமாக தூங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை ஆய்வாளர் சஞ்சிவ் குமார் நர்ஸாரி கூறுகையில், காவலர்கள் அனைவரும் தற்போது நல்ல ஊதியம் வாங்குகிறார்கள். எனவே தவறான வழியில் சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, காவலர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் அக்கறை செலுத்த வேண்டும். தங்களது பணியை செய்யும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.

அதோடு, காவலர்களுக்கு விடுப்புத் தேவைப்படும் போது அதனை வழங்கவும், அப்போதுதான் ஒரு நல்ல பணிச்சூழல் அமையும் என்றும் வலியுறுத்தினார். 

முதல் முறையாக, காவல்துறை அதிகாரி ஒருவர் ஆய்வின் போது, பணியைப் பற்றி மட்டும் பேசாமல், காவலர்களின் குடும்பம், உடல்நிலை குறித்தும் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com