சித்துவின் ராஜிநாமாவை ஏற்றார் பஞ்சாப் முதல்வர்

நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜிநாமாவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்றுக்கொண்டார்.
சித்துவின் ராஜிநாமாவை ஏற்றார் பஞ்சாப் முதல்வர்

நவ்ஜோத் சிங் சித்துவின் ராஜிநாமாவை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஏற்றுக்கொண்டார்.

பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், உள்ளாட்சி, சுற்றுலா மற்றும் கலாசார விவகாரங்கள் துறை அமைச்சராக இருந்து வந்தார் சித்து. இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 6ஆம் தேதி அமைச்சரவையை முதல்வர் அமரீந்தர் சிங் மாற்றியமைத்தார். அப்போது, சித்துவிடம் இருந்த துறைகள் பறிக்கப்பட்டு, மின்சாரம் மற்றும் மரபு சாரா எரிசக்தித் துறை ஒதுக்கப்பட்டது. 

அமரீந்தர் சிங்குடன் தொடக்கம் முதலே சித்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்ததால் இந்த மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சித்து மட்டுமில்லாமல் வேறு சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்பட்டன. இந்நிலையில், தனது பதவியை சித்து திடீரென ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார். ராஜிநாமா கடிதத்தையும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு அனுப்பி வைத்தார். 

சித்துவின் ராஜிநாமாவை ஏற்பதில் முதல்வர் அமரீந்தர் சிங் காலம்தாழ்த்தி வந்தார். இந்நிலையில் சித்துவின் ராஜினாமாவை அவர் இன்று ஏற்றுக்கொண்டுள்ளார். இதையடுத்து அந்த ராஜிநாமா கடிதத்தை அம்மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com