ஹேக்கர்களால் முடக்கப்பட்ட பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் 

பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதில் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
ஹேக்கர்களால் முடக்கப்பட்ட பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளம் 

புது தில்லி: பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள், அதில் பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

மத்தியில் ஆளும் பாஜகவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தினை செவ்வாய் காலை ஹேக்கர்கள் முடக்கினார்கள்.  அவர் அதன் முகப்பு பக்கத்தில் பிரதமர் மோடியை கிண்டல் செய்து சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ள சில விடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர்

இதையடுத்து உடனடியாக இணையதள சேவை துண்டிக்கப்பட்டது. மாலைவரை இதே நிலை தொடர்கிறது. விரைவில் திரும்புவோம் என்ற தலைப்புடன், இணையதளத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது என்ற செய்தியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதை புகைப்படத்துடன் இணைய பயனாளர்கள் பல்வேறு விதங்களில்  கேலியாகவும் கிண்டல் செய்தும் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

முன்னதாக 2018-ல் ஜம்மு காஷ்மீர் கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டத கொடூர சம்பவத்திற்கு நியாயம் கோரி, மாநில பாஜக இணையதளம் ஹேக்கிங் செய்யப்பட்டது என்பது நினைவுகூறத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com