பாஜக மத்திய தேர்தல் குழு: பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையில் ஆலோசனை

மக்களவைத் தேர்தல் நெருங்கியதையடுத்து பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையிலான பாஜக மத்திய தேர்தல் குழு இன்று இரண்டாவது முறையாக கூடி ஆலோசனை நடத்தியது. 
பாஜக மத்திய தேர்தல் குழு: பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையில் ஆலோசனை


மக்களவைத் தேர்தல் நெருங்கியதையடுத்து பிரதமர் மோடி, அமித்ஷா தலைமையிலான பாஜக மத்திய தேர்தல் குழு இன்று இரண்டாவது முறையாக கூடி ஆலோசனை நடத்தி வருகிறது. 

மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை நியமிப்பது குறித்து பாஜகவின் மத்திய தேர்தல் குழு இன்று (செவ்வாய்கிழமை) கூடியது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடக மற்றும் ஒடிஷா ஆகிய மாநிலங்களில் வேட்பாளர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியானது. 

இதுகுறித்து, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கையில், 

"முந்தைய கூட்டத்தில் 7 வடகிழக்கு மாநிலங்கள், பிகார், மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டது. இன்றைய கூட்டத்தில் மேலும் சில வேட்பாளர்கள் இறுதி செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்றனர்.

இந்த கூட்டம் மீண்டும் நாளை நடைபெறும் என்று தெரிகிறது. 

முன்னதாக, பாஜக தேசிய பொதுச் செயலாளர் மற்றும் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளர் அனில் ஜெயின் தெரிவிக்கையில், 

"மக்களவைத் தேர்தலில் புதிய வேட்பாளர்களை நிறுத்துவதற்கு மத்திய தேர்தல் குழுவிடம் சத்தீஸ்கர் மாநில பொறுப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்" என்றார். இதன்மூலம், சத்தீஸ்கர் மாநிலத்தில் தற்போது உள்ள 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com