இந்தியா

மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான அறிவிக்கை வெளியீடு

DIN


மக்களவைத் தேர்தலையொட்டி, முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில், முதல் கட்டமாக, 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு, ஏப்ரல் 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் அறிவிக்கையை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்ட பிறகு தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்டது.
அதன்படி, முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. மார்ச் 25-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். மார்ச் 26-ஆம் தேதி, வேட்புமனு பரிசீலிக்கப்படும். வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கு மார்ச் 28-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை, 91 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரம் இறுதியாகிவிடும்.
முதல் கட்ட தேர்தலில், ஆந்திரப் பிரதேசம்(25), அருணாசலப் பிரதேசம்(2), மேகாலயம்(2), மிஸோரம், நாகாலாந்து(1), சிக்கிம்(1), அந்தமான்-நிகோபர் தீவுகள்(1), தெலங்கானா (17), உத்தரகண்ட் (5) என 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதுதவிர, உத்தரப் பிரதேசம்(8), மேற்கு வங்கம் (2), பிகார்(4) ஆகிய மாநிலங்களிலும் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஜம்மு, பாரமுல்லா ஆகிய தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. அதேவேளையில், பாஜகவிடம்இருந்து ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“பிதாவே! ஏன், என்னைக் கைவிட்டீர்...”: ஆடு ஜீவிதம் குறித்து நடிகர் சசிகுமார்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

SCROLL FOR NEXT