மட்டன் பிரியாணி ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.180: இது தேர்தல் ஆணையத்தின் விலைப்பட்டியல்

மக்களவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கான விலைப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மட்டன் பிரியாணி ரூ.200, சிக்கன் பிரியாணி ரூ.180: இது தேர்தல் ஆணையத்தின் விலைப்பட்டியல்


சென்னை: மக்களவைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் 208 பொருட்களுக்கான விலைப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாங்கும் இந்த 208 பொருட்களுக்கான விலையும், தேர்தல் ஆணையம் வெளியிட்ட பட்டியலில் இருக்கும் விலையின் அடிப்படையில்தான் கணக்கெடுக்கப்படும்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் அதிகபட்சமாக ரூ.70 லட்சம் செலவிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கும் இந்த விலைப் பட்டியலில் உணவுப் பொருட்கள், வாடகைக்கு வாகனங்களுக்கான செலவு, தொழிலாளர்களை நியமிப்பது, மின்சாதனப் பொருட்களை பயன்படுத்துதல், பேனர்கள், போஸ்டர்கள், நாற்காலிகள், கொடிகள், பிளெக்ஸ் போர்டுகள் போன்ற அனைத்தும் இதில்  இடம்பிடித்துள்ளது.

இதில், நட்சத்திர விடுதியில் வேட்பாளர் தங்கினால் அந்த அறைக்கான கட்டணத்தையும்  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஐந்து நட்சத்திர விடுதியில் டபுள் பெட்ரூம் ஏசி அறைக்கு ரூ.9,300, மூன்று நட்சத்திர விடுதி என்றால் ரூ.5,800ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சில பொருட்களின் விலை விவரங்கள் உங்களுக்காக..
மட்டன் பிரியாணி ரூ.200
சிக்கன் பிரியாணி - ரூ.180
சாப்பாடு ரூ.100
காலை உணவு ரூ.100
டீ ரூ.10
பால் ரூ.15
வெஜிடபிள் சாதம் ரூ.50
இளநீர் - ரூ.40 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.

இதில்லாமல், வேட்பாளர்களும், அவரது கட்சியினரும் மேற்கொள்ளும் தேர்தல் பிரசாரங்கள் விடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com