நாடாளுமன்றத் தேர்தல்: பாஜகவின் முதல் கட்ட பட்டியல் வெளியீடு; வாராணசி தொகுதியில் மோடி போட்டி 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தல்: பாஜகவின் முதல் கட்ட பட்டியல் வெளியீடு; வாராணசி தொகுதியில் மோடி போட்டி 

புது தில்லி: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியலை,  தில்லியில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா வியாழனன்று வெளியிட்டார். 182 வேட்பாளர்கள் அடங்கிய அதன் முக்கிய விபரங்கள்  பின்வருமாறு.

அதன்படி மக்களவை தேர்தலில் வாராணசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். 

பாஜக மூத்த தலைவர் அத்வானி போட்டியிட்ட தொகுதியான காந்திநகர் தொகுதியில் பாஜக தலைவர் இம்முறை அமித்ஷா களம் காண்கிறார்.

அதேபோல காங்கிரஸ் தலைவர் ராகுல் போட்டியிடும் அமேதி தொகுதியில் ஸ்மிருதி இராணி மீண்டும்  போட்டி போடுகிறார்.

லக்னௌ தொகுதியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், நாக்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் போட்டியிடுகின்றனர். 

மேலும் சில முக்கிய வேட்பாளர்களின் விபரங்கள் பின்வருமாறு:

நடிகை ஹேம மாலினி - மதுரா

மிசோரம் ஆளுநர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த கும்மணம் ராஜசேகரன் -  திருவனந்தபுரம்

சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே. அல்போன்ஸ்  எர்ணாகுளம்

உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ - அருணாச்சல் கிழக்கு -

கலீத் ஜஹாங்கிர் - ஸ்ரீநகர்

ஜூகல் கிஷோர் - ஜம்மு காஷ்மீர்

ஜிதேந்திர சிங் - உதம்பூர்

சோஃபி யூசப் - அனந்த்நாக்

சாக்ஷி மகாராஜ் - உன்னாவ்

முன்னாள் அமைச்சர் சதானந்த கவுடா - பெங்களூரு வடக்கு

இவ்வாறு அந்த பட்டியலில் அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com