காலேஸ்வரத்தை மேம்படுத்த ரூ.100 கோடி: தெலங்கானா அரசு ஒதுக்கீடு

தெலங்கானா மாநிலம், கோதாவரி நிதிக் கரையையொட்டி அமைந்துள்ள காலேஸ்வர முக்தேஸ்வரா சுவாமி கோயில் அமைந்துள்ள காலேஸ்வரத்தை மேம்படுத்த  ரூ.100 கோடியை அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ்
காலேஸ்வரத்தை மேம்படுத்த ரூ.100 கோடி: தெலங்கானா அரசு ஒதுக்கீடு

தெலங்கானா மாநிலம், கோதாவரி நிதிக் கரையையொட்டி அமைந்துள்ள காலேஸ்வர முக்தேஸ்வரா சுவாமி கோயில் அமைந்துள்ள காலேஸ்வரத்தை மேம்படுத்த  ரூ.100 கோடியை அந்த மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஒதுக்கீடு செய்துள்ளார்.
காலேஸ்வர முக்தேஸ்வரா கோயிலில், ஒரே பீடத்தில் இரு சிவ லிங்கங்கள் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும்.
சந்திரசேகர் ராவ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கரீம்நகர் மாவட்டம், காலேஸ்வரம் நகரில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் நிறைவுபெறும் தருவாயில் உள்ளது. காலேஸ்வரம் நகரம் சுற்றுலாப் பகுதியாக மாற்றப்பட வேண்டும். எனது குடும்பத்தினருடன் காலேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமை வழிபட்டேன். சுற்றுலாத் தலமாக இந்த நகரை மாற்றினால், லட்சக்கணக்கானோர் இங்கு வருகை புரிவர். அதற்கு வளர்ச்சிப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். கோயிலின் வளர்ச்சிக்காக 600 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளேன். கோயில் குருக்களுக்கு தனியாக இல்லங்கள் கட்டித் தரப்படும். வேதபாட சாலைகளும், கல்லூரிகளும் அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் சந்திரசேகர் ராவ் குறிப்பிட்டுள்ளார்.
காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு ரூ.80,500 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. 2016ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஒரு கோடி ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களுக்கு நீராதாரம் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com