புதன்கிழமை 12 டிசம்பர் 2018

29. பாலிடிக்ஸ்

 28. ஆண்மைக் குறைவும் பெண்மைக் குறைவும்
27. கடித்த நாயைக் கடிக்கலாமா?
26. காகத்தின் வாரிசு குயில்
25. கடவுள் சோதிப்பான்; கைவிட மாட்டான்!
24. விஞ்ஞானம் தோற்கக் கூடும் மெய்ஞானம் தோற்காது! பிரசவத்தில் சோதனை!
23. பசி வந்தால் என்ன ஆகும்?
22. சேவையின்  மகிமை
21. மனதைப் போன்ற ஒரு எதிரி இல்லை, மறந்துவிடாதீர்கள்
20. தாவும் மனக் குரங்கு

ஞானயோகம்

நான் யார்? இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டால் ஒரு துன்பமில்லை; ஒரு துயருமில்லை. வாழும் காலம் முழுவதும் ஆனந்தத்தில் திளைக்கலாம். இன்பம் - துன்பம் என இரண்டு நிலையிலிருந்து மாறி சமன்நிலையான ஓரிடத்தில் மனத்தை இருத்தமுடியும் எனில், அது எத்தகைய சுகம்? அந்தச் சுகம் எப்படிக் கிடைக்கும்? அது கிடைக்கப்பெறுவதா. இல்லைவே இல்லை. அதைக் கண்டடையும் அறிவு நமக்கு மேலான ஒன்றால் வழங்கப்படுவது. எனவே, அது நமக்குரியது அல்ல. அது இன்னொன்றின் உரிமைப் பொருள். அந்த இறைபொருளின் பேராற்றலுடன் எதையுமே அறியலாம். தேடலாம். கண்டுபிடிக்கலாம். அனுபவிக்கலாம். அறிவு என்றைக்குமே தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக்கப்பட வேண்டும். அதுவே அறிவின் உட்பொருளாகும். அறிவின் இலக்கும் அதுவே ஆகும். ஒரு மனிதன் தனது அறிவால் வளம் பெற்று, நலமுடன் வாழும்போது,  தன்னைச் சுற்றியுள்ள உலகத்தாரும் அதே வளமும் நலமும் பெற வேண்டும் என்று இயல்பாகவே விரும்ப வேண்டும். அதில் ஒரு கனவு நிலவ வேண்டும். பின்னர் அதற்கான வழிகளில் அறிவைப் பிரயோகிக்க வேண்டும். அறிவு அற்றம் தீர்க்கும் கருவி என்றார் வள்ளுவர். நம் துன்பங்களை நீக்கி நம்மைப் பாதுகாப்பது அறிவு. அந்த அறிவின் பயனாவது தன்னை அறிதல். தெளிதல். ஞானம் எய்துதல் தான் யார்? தனது அறிவு எது? இரண்டுக்கும் தன்னிடமே பதில் உண்டு. தன்னை அறிதல் என்பது எது என்ற ஞானத்தை தேடிய பயணம் இது. தொடர்வோமா?

கே.எஸ். இளமதி.

மதுரை மாவட்டம், வத்தலக்குண்டு சொந்த ஊர். நாவல்கள், தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதியுள்ளார். யோகக்கலையைத் கற்றுத் தேர்ந்து, அதன் பயன்களை அனைவரும் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் யோகசிரியராக மாறியவர். யோகக் கலை சார்ந்து பத்து நூல்களை எழுதியுள்ளார். ‘பிராணாயாமம்’ என்ற பெயரில் மாதப் பத்திரிகையின் ஆசிரியர். யோகா, பிராணாயாமம், தியானப் பயிற்சிகளில் தவறாமல் ஈடுபட்டு வரும் இவர் பக்தி, ஞானம் பற்றிய தேடுதலில் இளம் வயதில் இருந்தே ஈடுபட்டுள்ளார். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும், சரியை, கிரியை, யோகம் இவற்றைக் கற்று, ஞானமார்க்கத்தில் சென்று இறைநிலை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியே இத் தொடரை எழுதுகிறார். இம்முயற்சியில் தான் பெற்ற அனுபவங்களையும் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். தொடர்புக்கு - கே.எஸ். இளமதி, கைப்பேசி - +91-99405 88046 / 99405 87973; இமெயில் - ks.ilamathy@gmail.com, pranayamamyoga@gmail.com