வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

26. பதற்ற சூழல்களில்தான் சிறப்பாக விளையாடுகின்றேன்! மார்ட்டின் கப்டில்

25. மனைவி குழந்தைகளிடமிருந்து வாழ்க்கை பாடங்களை பயின்று வருகிறேன்! ஷிகர் தவன்
24. இந்திய அணியின் புதிய சகாப்தத்தின் துவக்கம் இதுதான்! ரோஹித் ஷர்மா மற்றும் ஷிகர் தவன் இணை!
23. வாழ்க்கை எப்போது மாறும் என்று எவராலும் கணிக்க முடியாது!
22. இந்த உலகத்தில் நிலையானதென்று எதுவும் இல்லை! ஷிகர் தவன் பேட்டி!
21. வாழ்க்கை என்பதொரு கொண்டாட்ட நிகழ்வு! – கிரிஸ் கேயல்
20. இதுதான் இதுவே தான் கிரிஸ் கேயலின் ஆகச் சிறந்த நான்கு சிறந்த இன்னிங்ஸ்!
19.மிதமிஞ்சிய கொண்டாட்டங்கள் எனக்குப் பிடிக்கும்! கிரிஸ் கேயலின் ஆசை என்ன?
18. இருபது ஓவர் கிரிக்கெட் விளையாட்டின் கடவுள்: கிரிஸ் கேயல்
17. பாபர் அஸாமுக்கு ஆதர்ச கிரிக்கெட் விளையாட்டாளராக இருந்தவர் யார்?

இது சிக்ஸர்களின் காலம்

இந்தியாவில் கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே பாவிக்கப்படுகிறது. ஒவ்வொரு இந்தியச் சிறுவனும் வெகு இயல்பாக கிரிக்கெட் விளையாட துவங்கிவிடுகிறான். ஊருக்கு நான்கைந்து கிரிக்கெட் அணியை நம்மவர்கள் நடந்திக்கொண்டிருக்கிறார்கள். கூட்டு விளையாட்டான கிரிக்கெட் பல மனிதர்களையும் உணர்வுபூர்வமாக பிணைக்கிறது. எவ்வித சுய அடையாளமுமற்று கிரிக்கெட் என்ற சங்கிலியால் இந்தியர்கள் இணைகிறார்கள். கிரிக்கெட் இந்திய மக்களிடம் உணர்வுகளுடன் நேரடியாக தொடர்புடையது. கிரிக்கெட் வீரர்கள் நட்சத்திரங்களாக ஒளிர்கிறார்கள். முன்பெல்லாம் ஐம்பது ஓவருக்கு 250 ரன்கள் சேர்ப்பதே பெரிய விஷயமாக கருதப்பட்டது. இன்றைக்கு ஒருநாள் போட்டிகளில் வெகு இயல்பாக 400 ரன்களை கடக்கிறார்கள். பவர் பிளே, ஃப்ரீஹிட், இருபது ஓவர் கிரிக்கெட் என பல புதிய முறைகள் கிரிக்கெட் விளையாட்டில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இது மேலும் மேலும் உணர்வுகளை சீண்டியபடியே இருக்கிறது. முன்காலங்களில், நின்று நிதானித்து இவ்விளையாட்டில் ஈடுபட்ட வீரர்களை இன்றைக்கு களத்தில் பார்க்க முடிவதில்லை. எல்லோரும் இளையவர்கள். துடிப்புமிக்கவர்கள். சாதனைகளை விரைவாக அடையத் துடிக்கும் சுறுசுறுப்புமிக்கவர்கள். இன்றைய கால கிரிக்கெட் ரசனையிலேயே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. முன்பு நிதானமாக கிரிக்கெட் போட்டியை பார்வையிட்ட மக்கள் இன்று பரபரப்பையும், சீட்டின் நுனியில் குதித்துக்கொண்டு பார்க்கவுமே விரும்புகிறார்கள். ‘வீ வாண்ட் சிக்ஸர்’ என்ற முழக்கங்கள் தொடர்ந்து மைதானத்தில் ஒலித்தபடியே இருக்கிறது. அப்படி உலகளவில் தங்களது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களின் இதயத் துடிப்பை எகிற அடித்தவர்கள் குறித்து அறிந்துகொள்வதையே இந்தத் தொடர் நோக்கமாக கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாட்டின் அதிரடி விளையாட்டாளரையும் பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். ஒவ்வொருவரைப் பற்றியும் நிதானமாக படித்துக்கொண்டிருக்க யாருக்கும் பொறுமை இருக்காது என்பதால், வீரருக்கு ஐந்து நல்லது நான்கு பகுதிகள் என இந்தத் தொடர் பிரிக்கப்படுகிறது. சிக்ஸர்களின் காலத்தில் சக்ஸஸ்களை அடைந்துகொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்களை அறிந்துகொள்வோம் வாருங்களேன்.

ராம் முரளி.

ராம் முரளி. பொறியியல் பட்டதாரியான இவர் ஆனந்த விகடனில் மாணவ நிருபராகப் பணியாற்றியவர். தற்போது ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகவும் திரைத் துறையில் உதவி இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறார். பல முன்னணி இதழ்களில் கதை, கட்டுரை மற்றும் திரைப்படங்கள் சார்ந்து  மொழிபெயர்ப்பு கட்டுரைகள் எழுதி வருகிறார்.