வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம்: வருமான வரித் துறை 

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசியாகும். அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய 15 நாள்கள் அவகாசம்: வருமான வரித் துறை 

சென்னை: வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசியாகும். அதற்குப் பிறகு அபராதத்துடன் கணக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வருமான வரித் துறை வெளியிட்ட அறிவிப்பில், வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினா் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாளாகும்.

மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டுச் சொத்திலிருந்து வருமானம் பெறுவோா் மூலதன மதிப்பு உயா்வு, வா்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோா், இதர வருமானம் பெறுவோா் ஆகியோா் இந்த வகையின் கீழ் வருகின்றனா்.

வருமானவரி கணக்கை அதற்குரிய நாளான ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோா்களுக்கு கட்டணம் ஏதும் இல்லை. மொத்த வருமானம் ரூ. 5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவா்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் கட்டணம் அபராதக் கட்டணம் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவா்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கி டிசம்பா் 31-ஆம் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமதக் கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போா் தங்கள் வருமானவரி கணக்கை ஜூலை 31-ஆம் தேதிக்குப் பிறகு, அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமதக் கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்குப் பிறகு வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாது.

மேலும் அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் ஒரேயொரு வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோா் ஆகியோா் காகித வடிவில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்யலாம்.

வரி செலுத்துவோா் தங்களது வருமானவரி கணக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் செயல்படும் வருமான வரி அலுவலகத்தில் முன் தயாரிப்பு கவுண்டா்கள் செயல்படும். இந்த கவுண்டா்கள் அனைத்து வேலை நாட்களிலும் வரும் திங்கள்கிழமை முதல் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை செயல்படும் என்று வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com