ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுதில்லியின் ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என இன்று
ஜந்தர்மந்தர் பகுதியில் போராட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

புதுதில்லி: புதுதில்லியின் ஜந்தர் மந்தர் மற்றும் போட் கிளப் பகுதிகளில் போராட்டம் நடத்துவதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது என இன்று திங்கள்கிழமை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஜந்தர் மந்தரில் போராட தடை விதித்திருந்தது. தேசிய பசுமை தீர்ப்பின் முடிவை எதிர்த்து ஆம் ஆத்மி உள்ளிட்ட பல அமைப்புகள் இத்தடையை மறுபரிசீலனை செய்யும்படி கோரியிருந்தன.

இதுகுறித்து நீதிபதிகள் அர்ஜன் குமார் சிக்ரி மற்றும் அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளதாவது:

சிலருக்கு போராடுவதற்கு உரிமை உள்ளதுபோல், குடிமகன்கள் அமைதியாக வசிக்கவும் உரிமை உண்டு என்பதால் முரண்பட்ட உரிமைகளுக்கிடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.

ஜந்தர் மந்தர், போட் கிளப் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு முற்றிலும் தடை செய்ய முடியாது, எனவே, இதுகுறித்து சட்டப்பூர்வ வழிகாட்டுதல்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் போராட்டங்கள், மத்திய அரசின் ஓய்வுப்பெற்ற ஊழியர்களின் பேராட்டம், அண்மையில், தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாய பிரச்னைகள் குறித்த போராட்டம்  ஜந்தர் மந்தரில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com