கார்கில் நினைவு தினம்: போர் நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் அஞ்சலி

ஜம்மு-காஷ்மீர்: 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில்
கார்கில் நினைவு தினம்: போர் நினைவிடத்தில் நிர்மலா சீதாராமன் அஞ்சலி


ஜம்மு-காஷ்மீர்: 1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடனான கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் நினைவாக ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் 19-வது ’விஜய் திவாஸ்’ நினைவு தினத்தில் கார்கில் திராஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களின் குடும்பத்தினரும், ராணுவ அதிகாரிகள், பொதுமக்களும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதேபோன்று தில்லியில் அமைந்துள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ராணுவத் தளபதி பிபின் ராவத், கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லன்பா மற்றும் விமானத் தளபதி மார்சல் பீரண்டர் சிங் தானா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

மேலும் ராணுவ வீரர்கள், பொது மக்கள், கார்கில் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர்கள் உள்ளிட்டோரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவுகூரும் வகையில் கல்லூரி மாணவர்கள் கார்கில் தின உறுதிமொழி எடுக்கப்பட்டு கல்லூரிகளில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

கார்கில் போரில் இந்திய தரப்பில் 527 பேரும், பாகிஸ்தான் தரப்பில் 357 முதல் 453 வரையிலும் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com