கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் திடீர் ராஜிநாமா

கேரள மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் இன்று பதவி விலகினார். தனது ராஜிநாமா கடிதத்தை அவர் முதல்வர் பினராயி
கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் திடீர் ராஜிநாமா

திருவனந்தபுரம்: கேரள மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் மேத்யூ தாமஸ் இன்று பதவி விலகினார். தனது ராஜிநாமா கடிதத்தை அவர் முதல்வர் பினராயி விஜயனிடம் நேரில் அளித்தார்.  

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவையில், கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மேத்யூ தாமஸ் நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயனை இன்று நேரில் சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். தற்போது நான் ஒரு எம்எல்ஏ. என தெரிவித்தார். 

அமைச்சராக பணிபுரிந்த இரண்டரை ஆண்டுகளில் முழுமையாக திருப்தி அடைந்ததாக சொல்ல முடியாது, ஆனால் தனது பதவி காலத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடிந்ததில் மகிழ்ச்சி என்றார். மாநில கட்சித் தலைவர் பதவிக்கு உரிமை கோரூவீர்களா என்று கேட்டதற்கு, எந்தவொரு கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் தனது ராஜிநாமாவுக்கு எந்த நிபந்தனையும் இல்லை.  
கட்சியின் மாநிலத் தலைவராக பணியாற்றி வந்தது தனது வளர்ச்சிக்கு உதவியது என்றும் கட்சி பிளவுபடாது என தெரிவித்தார். 

மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் கேரள மாநில தலைவரும் பாலக்காடு சித்தூர் தொகுதி எம்எல்ஏவுமான கிருஷ்ணன்குட்டியை அமைச்சர் பதவியில் அமர்த்த அக்கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கு ஏதுவாக மேத்யூ தாமஸ் பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு கேரள சட்டப்பேரைவைக்கு 3 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர்.

கிருஷ்ணன் குட்டி கேரள மாநில புதிய அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com