ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை சீர்குலைக்க 300 தீவிரவாதிகள் திட்டம்: ராணுவம் எச்சரிக்கை 

ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை சீர்குலைக்க 300 தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான்
ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை சீர்குலைக்க 300 தீவிரவாதிகள் திட்டம்: ராணுவம் எச்சரிக்கை 


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தலை சீர்குலைக்க 300 தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ள நிலையில், எல்லைக்குள் ஊடுருவ பாகிஸ்தான் தீவிரவாதிகள் 250 பேர் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் முதலில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படும். பிறகு, ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இந்த உள்ளாட்சித் தேர்தலில் முதல் முறையாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. புலம் பெயர்ந்து வசிப்பவர்கள், தபால் மூலம் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நகர உள்ளாட்சித் தேர்தல் 4 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை திங்கள்கிழமை (அக். 8) நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டத் தேர்தல், அக்டோபர் 10-ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தல், அக்டோபர் 13-ஆம் தேதியும், நான்காம் கட்டத் தேர்தல் அக்டோபர் 16-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

அனைத்து கட்டத் தேர்தலிலும், வாக்குப் பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மதியம் 2 மணி வரை நடைபெறும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவாகும் வாக்குகள், அக்டோபர் 20-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

மாநிலத்தில் ஸ்ரீநகர், ஜம்மு ஆகிய இரு மாநகராட்சிகள் உள்பட மொத்தம் 79 நகராட்சி அமைப்புகள் உள்ளன. இந்த நகராட்சி அமைப்புகளில் மொத்தம் 1,145 வார்டுகள் உள்ளன. ஊராட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி, பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், நாளை முதல் (அக். 8) முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ள நான்கு கட்டமான உள்ளாட்சித் தேர்தலுகாகன பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்தில் 300 தீவிரவாதிகள் ஏற்கனவே ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவியுள்ளதாகவும், அவர்களது திட்டங்களை நிறைவேற்ற காத்திருக்கின்றனர் என்று தகவல் கிடைத்துள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

அவர்களின் சதியை முறியடிக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஜம்மு-காஷ்மீரில் ஊருடுவுவதற்காக மேலும் 250க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லைப் பகுதியில் தயார் நிலையில் இருப்பதாகவும் ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறினார். 

இதையடுத்து ராணுவம், போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர், பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அச்சுறுத்தல் உள்ள வேட்பாளர்களை பாதுகாப்பான இடத்தில் தங்கவைத்திருப்பதாக கூறினார். 

தேர்தல் நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் வாகனங்களை சோதனை செய்வதற்காக பல சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் சோதனையின்போது மோப்ப நாய்களும் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com