தற்போதைய செய்திகள்

வைகை அணையின் நீர்மட்டம் உயர்வு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

DIN


தேனி: வைகை அணை நீர்மட்டம் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக 66 அடியை எட்டியதை தொடர்ந்து 5 மாவட்ட வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் இன்று திங்கள்கிழமை (அக்.15) அணையின் நீர்மட்டம் 66 அடியாக உயர்ந்துள்ளது. 

நீர்பிடிப்பு பகுதியான மூலவைகையாறு, வருசநாடு, வெள்ளிமலை வனப்பகுதி, கொட்டக்குடி ஆறு மற்றும் முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கடந்த செப்.30 ஆம் தேதி முதல் அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 1,600 கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மற்றும் மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை ஆகியவற்றால் வைகை அணை நீர்மட்டம் சீராக உயர்ந்து 60.63 அடியாக உயர்ந்து வந்தது.

அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 3,159 கன அடி. அணையில் தண்ணீர் இருப்பு 5,352 மில்லியன் கன அடி. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு விநாடிக்கு 1,850 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் அணையின் நீர்மட்டம் அதன் முழுகொள்ளளவான 71 அடியை எட்டிய நிலையில், இன்று அணையின் நீர்மட்டம் 66 ஆக உயர்ந்துள்ளது

இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

SCROLL FOR NEXT