வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

ஹேக்கர்களின் கைவரிசையால் யுபிஎஸ்சி இணையதளம் முடக்கம்

DIN | Published: 11th September 2018 10:43 AM


ஹேக்கர்களின் கைவரிசையால் இந்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) இணையதளம் நேற்று திங்கள்கிழமை முடக்கப்பட்டது.

இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான பணியிடங்களுக்கான பணியாளர்களை தேர்வுகள் நடத்தி தேர்வு செய்து தருவது யுபிஎஸ்சி-யின் வேலை. இதற்காக யுபிஎஸ்சிக்கு என சொந்தமாக (ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ன்ல்ள்ஸ்ரீ.ஞ்ர்ஸ்.ண்ய்) இன்ற இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தை நேற்று ஹாக்கர்களால் முடக்கப்பட்டது.

யுபிஎஸ்சி இணையதளத்துக்குச் சென்றபோது ஒரு டோரேமான் கார்ட்டூன் படத்துடன் “டோரேமொன்!!!!பிக் அப் தி கால்” என்ற வாசகத்துடன் திரையில் காட்சி படுத்தப்பட்டிருந்தது. பலருக்கு இந்த படம் பிடித்துபோக சிலர் பிரதமரின் அலுவலகத்தின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்தனர்.

இணையதளம் வழியாக யுபிஎஸ்சி 2018 தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான பணி தொடங்கப்பட்ட நாளான நேற்று அதன் இணையதளம் முடக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இந்த இணையதளத்தின் செயல்பாட்டில்தான் மத்திய அரசின் அனைத்து பணியிடங்களுக்கான செயல்பாடுகள் அடங்கியுள்ளன. 

Tags : UPSC Website Hacked Photo of Cartoon Union Public Service Commission Digital India Ministry of Electronics and Information Technology

More from the section

நீ தானே... நீ தானே...: அட்லி பிறந்தநாளுக்கு ப்ரியா உருக்கமான வாழ்த்து! (படங்கள்)
தேள் போன்று கொடுக்கை வைத்து கொட்ட மட்டுமே தெரிந்தவர் அகிலேஷ்: அமர் சிங் கடும் தாக்கு 
செய்தி எதிரொலி: மணப்பாறையில் கண்பார்வை மாற்றுத் திறனாளிக்கு ஏடிஎம் அட்டை வழங்கல்
சென்னையில் நடைபெற்ற போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்த சுழற்பந்துவீச்சாளர்! (விடியோ இணைப்பு)
அஜய் மக்கான் ஆரோக்கியத்துடன் இருக்க பிரார்த்திக்கிறேன்: பிரதமர் நரேந்திர மோடி