தற்போதைய செய்திகள்

மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் 10 கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்கள் கண்டுபிடிப்பு

DIN


விழுப்புரம்: வாகன தகுதிச்சான்று வாங்க லஞ்சம் வாங்கியதாக கைதான, கள்ளக்குறிச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் பாபுவின், கடலூரில் உள்ள வங்கிகளின் பெட்டகங்களை திறந்து விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் நேற்று புதன்கிழமை சோதனையிட்டனர். அப்போது சுமார் 10 கிலோ தங்கம் நங்கைகளும், 20 கிலோ வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  

வாகன தகுதிச்சான்று வாங்க லஞ்சம் வாங்கியதாக ஆய்வாளர் பாபு(55), அவரது உதவியாளர் செந்தில்குமார் ஆகியோர் கடந்த 11-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். 

இதையடுத்து கடலூரில் உள்ள பாபுவின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.35 லட்சம் ரொக்கம், 200 பவுன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து, பாபுவின் வங்கிக் கணக்கு, வங்கிப் பெட்டகங்கள் முடக்கி வைக்கப்பட்டன. 

இந்நிலையில், கடலூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட இரு வங்கிகளில் பாபு வைத்திருந்த 3 பெட்டகங்களை டி.எஸ்.பி. தேவநாதன் தலைமையிலான ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் திறந்து சோதனையிட்டனர். அதில், சுமார் 10 கிலோ தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி நகைகள் இருந்தன. இதையடுத்து, அவற்றை பெட்டகத்தில் வைத்துவிட்டு வந்தனர். 

இதைத் தொடர்ந்து, வேறு வங்கிகளில் பாபு வைத்துள்ள பெட்டகங்களை ஒரிரு நாட்களில் திறந்து சோதனையிட்ட பிறகு, அனைத்துப் பெட்டகங்களிலும் உள்ள நகைகள், பொருள்களை பறிமுதல் செய்து நகை மதிப்பீட்டாளர்கள் மூலம் சோதனை செய்து கணக்கிடப்படும். அதன் பின்னர் அந்த நகைகள் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ.1.75 லட்சம் பறிமுதல்

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT