இந்தியா-பாகிஸ்தான் அமைச்சர்கள் சந்திப்பு ரத்து ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்

இந்தியா - பாகிஸ்தான் அமைச்சர்கள் சந்திப்பு ரத்தானது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்
இந்தியா-பாகிஸ்தான் அமைச்சர்கள் சந்திப்பு ரத்து ஏமாற்றம் அளிக்கிறது: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்


இஸ்லாமாபாத்: இந்தியா - பாகிஸ்தான் அமைச்சர்கள் சந்திப்பு ரத்தானது ஏமாற்றம் அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். 

இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையே அடுத்த வாரம் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

முன்னதாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடிதம் மூலம் வியாழக்கிழமை விடுத்த கோரிக்கையை ஏற்று, நியூயார்க்கில் இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேச மத்திய அரசு சம்மதம் தெரிவித்தது. 

அதன்படி, அடுத்த வாரம் ஐ.நா. சபைக் கூட்டத்தின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்தூம் மஹ்முத் குரேஷியும் சந்தித்துப் பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுவிட்டது.

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் 3 போலீஸார் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாலும், இந்திய பாதுகாப்புப் படையால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியை புகழும் வகையில் பாகிஸ்தான் அரசு அஞ்சல் தலை வெளியிட்டதை அடுத்தும் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்க பதிவில், எனது அமைதி பேச்சு வார்த்தைக்கான அழைப்புக்கு இந்தியாவின் முரட்டுதனமான மற்றும் எதிர்மறையான பதில்களின் ஏமாற்றத்தால் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளேன். எனினும், என் வாழ்நாள் முழுவதும் பெரிய பதவிகளை ஆக்கிரத்துள்ள பார்வை இல்லாத சிறிய மனிதர்களை பார்த்துள்ளேன். அவர்களுக்கு தொலை நோக்கு பார்வை இல்லை என விமர்சனம் செய்துள்ளார். 

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எழுதிய கடிதத்தை, அமைதியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் முயற்சி என்று இந்தியா ஏற்று, பேச்சுவார்த்தைக்கு முன் வந்தது. ஆனால், ஒரு பக்கம் பேச்சுவார்த்தை என்று கூறிவிட்டு, மறுபுறம் பயங்கரவாதத்தை தூண்டிவிடுவதை பாகிஸ்தான் தொடர்ந்து வருகிறது. அங்கு ஆட்சி மாறியபோதும் இதுபோன்ற செயல்பாடுகள் மாறவில்லை. இப்போது, இம்ரான் கானின் உண்மை முகமும் வெளிப்பட்டுள்ளது. இந்தியாவின் நம்பிக்கையை பாகிஸ்தான் ஒருநாள் கூட காப்பாற்றவில்லை என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com