ஸ்டாலின் வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்

ஆட்சி கலையும் வரை தூங்கமாட்டேன் என கூறும் மு.க.ஸ்டாலின் வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என துணை முதல்வர்
ஸ்டாலின் வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆவேசம்


நாகர்கோவில்: ஆட்சி கலையும் வரை தூங்கமாட்டேன் என கூறும் மு.க.ஸ்டாலின் வாழ்நாள் முழுவதும் தூங்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கலந்துகொண்டு பேசுகையில், இந்தியாவிற்கு எல்லை இருக்கிறது, எம்ஜிஆருக்கு எல்லை இல்லை. நூற்றாண்டு விழா கூட்டம் பல்வேறு காரணங்களால் சற்று தாமதமாக குமரி மாவட்டத்தில் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் நடக்கும் இந்த விழாவைக் காண அம்மா இல்லை, ஆனால் அம்மா ஆட்சி இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆண்டபோது தமிழகத்தில் பசி இல்லை. 

பிறக்கும்போதே கருணை உள்ளத்தோடு பிறந்தவர் எம்ஜிஆர். ஏழைகள் நலம்பெற நல்ல திட்டங்களை கொண்டுவந்தவர். அவர் வழியில் சிறந்த ஆட்சியை கொடுத்தவர் ஜெயலலிதா. அதே ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. 

முதல்வர் கனவில் மிதந்தவர்கள் கண்ணீர் கடலில் நிற்கிறார்கள். அந்த விரக்தியில் வாயில் வந்ததை எல்லாம் பேசுகிறார்கள். நெஞ்சில் துணிவிருந்தால் நேருக்கு நேர் திருப்பரங்குன்றத்திற்கும், திருவாரூருக்கும் வாருங்கள். 

ஜெயலலிதாவுக்கு செய்த துரோகத்திற்காக நீக்கப்பட்ட ஒருவர் தொண்டர்கள் தன பக்கம் இருப்பதாகச் சொல்கிறார். ஒன்றரை கோடி தொண்டர்களுடன் எஃகு கோட்டையாக அதிமுக இருக்கிறது. நம் இயக்கத்தை எந்தக் கொம்பனாலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது. 

செயல் தலைவராக இருந்து புதிதாக தலைவராக வந்தவர், ஆட்சி கலையும் வரை தூங்கமாட்டேன் என்கிறார். அப்படியானால் அவர் வாழ்நாள் முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டியதுதான். அவர், 2016-ஆம் ஆண்டு தேர்தலின்போது கலர் கலராக சட்டை அணிந்து பார்த்தார், நடந்து பார்த்தார், சைக்கிளில் சென்றார். ஆனால், மக்கள் அவரை பார்க்கவில்லை. அவர் டீ குடித்தார், நாம டீ கடையே நடத்தியிருக்கிறோம். 

கடந்த மக்களவைத் தேர்தலில் 37 இடங்களில் வெற்றிபெற்றோம். ஆனால், அவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட்டையே இழந்துவிட்டதை மறந்துவிட்டு பேசுகிறார்கள். தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தை நடத்த வேண்டும் என்றார் பன்னீர்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com