தற்போதைய செய்திகள்

ஆந்திராவில் திடீர் பதற்றம்: சுட்டுக் கொல்லப்பட்ட எம்எல்ஏவின் ஆதரவாளர்கள் காவல்நிலையத்திற்கு தீ வைப்பு..!

DIN


ஆந்திராவில் மாவோயிஸ்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்ட எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் காவல்நிலையங்களுக்குத் தீ வைத்துள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. 

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம் அரக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் ஆவார். இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த அவர், இதற்கு முன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்தார். சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில், அரக்கு தொகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்பதற்காக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சவேரி சோமாவுடன் கிடாரி சர்வேஸ்வர ராவும் காரில் சென்றுள்ளார். அப்போது, தும்பரிகுடா வட்டத்தில் உள்ள தூத்தங்கி என்னும் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது வனப்பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்டுகள் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சட்டப்பேரவை உறுப்பினர் கிடாரி சர்வேஸ்வர ராவ் உயிரிழந்தார். அதேபோல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சிவேரி சோமா சுட்டுக்கொள்ள்ளப்படடார். மேலும் உடன் சென்ற பாதுகாவலரும் சுட்டுக் கொல்லப்பட்டார். 

ஒரு பெண் மாவோயிஸ்ட் தலைவர் தலைமையிலான குழு இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக நேரடி சாட்சிகள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் தற்போது தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.  

இந்நிலையில், கிடாரி சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவில்லை எனக் கூறி, எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் தும்பரிகுடா காவல் நிலையத்திற்கு தீ வைத்துள்ளனர். தீ வைப்பதைத் தடுக்கச் சென்ற காவலர்களையும் ஆத்திரமுற்ற ஆதரவாளர்கள் தாக்கியதில் அவர்கள் காயமடைந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காவல்நிலையத்துக்கு பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு ரெட் அலெர்ட் என்ற உச்சபட்ச பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதி நிறுவன ஊழியரிடம் வழிப்பறி: 2 சிறுவா்கள் உள்பட 6 போ் கைது

சிறைவாசிகளுக்கு சிறப்பு நீதிமன்றம்: 5 போ் விடுதலை

வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி பேரணி

திருப்பூா் தொகுதியில் 15 வேட்பாளா்களின் வேட்பு மனுக்கள் ஏற்பு

SCROLL FOR NEXT