சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம் 

சவுதி அரேபியாவில் முதல்முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமனம் 

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 


சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். 

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விஷன் 2030 என்ற பெயரில் சவுதி சமூகத்தை நவீனமாக்கும் வகையில் அந்நாட்டு அரசு அதிகப்படியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 

சவுதி அரேபியாவில் முதல் முறையாக பெண் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாலை நேரங்களில் ஆண் வாசிப்பாளருடன் சேர்ந்து செய்திகளை வாசிக்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் வீம் அல் தஹீல் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

சவுதி அரேபியாவில் வாகனங்கள் ஓட்ட, திரையரங்குகள் உள்ளிட்ட திட்டங்கள் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பெண் செய்தி வாசிப்பாளர் நியமனமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com