ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துகடை வணிகர்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில்
ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனைக்கு எதிர்ப்பு: மருந்து வணிகர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

ஆன்லைன் மூலம் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருந்துகடை வணிகர்கள் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மத்திய அரசு ஆன்லைன் மூலமாக  மருந்துகளை விற்பனை செய்ய அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தரம் குறைந்த மற்றும் போலி மருந்துகள் விற்பனையும், போதை மருந்துகள் தாராளமாக புழக்கத்தில் வரும் ஆபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், மருந்துகள் பொதுவாக மருத்துவரின் பரிந்துரைச் சீட்டுபடி ஒரு மருந்தாளுநரால் அல்லது மருந்தாளுநரின் மேற்பார்வையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்பது மருந்துகள் சட்ட விதியாக உள்ளது.  இவ்வாறு ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது அனுமதிக்கப்படுமானால் நிறைய விதிமீறல்கள் ஏற்படும்.

இதனால் கிராமப்புற சிறு, குறு மற்றும் மத்திய தர மருந்துக் கடை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். இந்த மருந்துக் கடைகளை நம்பி வேலையில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். எனவே, மத்திய அரசின் இந்த முடிவைக் கைவிட வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் அனைத்திந்திய வேதியியல் மற்றும் மருந்துகள் (பாரத் கெமிஸ்ட்) அமைப்பு மருந்துகடைகளை அடைத்து வேலைநிறுத்தப் போராட்டம் செய்ய அழைப்பு விடுத்திருந்தது. 

இந்த கடையடைப்புப் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்கண்ட மருந்துகடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று அதிகாலை தொடங்கி, மாலை 6 மணிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இருக்கும் மருந்துக் கடைகள் வழக்கம் போல் செயல்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com