சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ76.03 ஆகவும், டீசல் லிட்டர் ரூ69.96 ஆகவும் விற்பனை
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!


சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் நேற்றைய விலையில் மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ76.03 ஆகவும், டீசல் லிட்டர் ரூ69.96 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 

எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வந்த நிலையில், நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து விற்பனை செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

நேற்று பெட்ரோல் மட்டும் லிட்டருக்கு 14 அதிகரித்தும், டீசல் விலை மாற்றமின்றியும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், டீசல் நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி பெட்ரோல்  ஒரு லிட்டர் ரூ.76.03 ஆகவும், டீசல் ஒரு லிட்டர் ரூ.69.96 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com