துடைப்பம் பிடிக்கத் தெரியாதா ஹேமாமாலினிக்கு! நெட்டிஸன்களின் நையாண்டி!

பாராளுமன்ற வளாகத்தை சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மாநில நிதி அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு துடைப்பம் பயன்படுத்தி சுத்தம் செய்ததற்கு 9/10 மதிப்பெண்களும், ஹேமா மாலினிக்கு 0/10 மதிப்பெண்களும் 
துடைப்பம் பிடிக்கத் தெரியாதா ஹேமாமாலினிக்கு! நெட்டிஸன்களின் நையாண்டி!

பாராளுமன்ற வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்வச் பாரத் (தூய்மை இந்தியா) நிகழ்வின் போது மாநில நிதித்துறை அமைச்சரான அனுராக் தாக்கூர், மதுரா தொகுதி எம் பியும் நடிகையுமான ஹேமாமாலினி உள்ளிட்ட மற்றும் சில எம் பிக்கள் கையில் துடைப்பத்துடன் பாராளுமன்ற வளாகத்தை கூட்டிப்பெருக்கி சுத்தம் செய்வது போன்ற விடியோ ஒன்று வெளியானது. இந்த விடியோவில் நடிகையும் மதுரா எம் பியுமான ஹேமாமாலினியின் செயல் தற்போது நெட்டிஸன்களிடையே பலத்த கண்டனத்துக்கும் கேலிக்கும் உள்ளாக்கப்பட்டுள்ளது. அவர் அந்த நிகழ்வில் துடைப்பம் பிடிக்கத் தெரியாதவர் போல நடந்து கொண்டார். உடனிருக்கும் ஆண் எம் பிக்கள் படு விரைவாக துடைப்பத்தால் பெருக்கி தூள் கிளப்பிக் கொண்டிருக்க ஹேமாவோ கையிலிருக்கும் துடைப்பத்தை ஹாரிபாட்டரின் மேஜிக் ப்ரூம் போல பிடித்துக் கொண்டு அவர்களைப் பார்த்து துடைப்பம் போடக் கற்றுக்கொள்ளும் மாணவி போல நின்று கொண்டிருந்தார். 

இந்த விடியோ இணையத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருவதோடு அது குறித்த மீம்களும் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ‘துடைப்பத்தை கையில் எப்படிப் பிடிப்பது என்று கூட ஹேமாமாலினிக்குத் தெரியாதா? அவரும் ஒரு பெண் தானே? வீட்டில் துடைப்பம் கொண்டு ஒருமுறையாவது சுத்தம் செய்த அனுபவம் கூட அவருக்கு உண்டா இல்லையா? தெரியவில்லை என்றெல்லாம் நெட்டிஸன்கள் கேலியாகக் குறிப்பிட்டதோடு. உடன் அந்த நிகழ்வில் பங்கேற்று பாராளுமன்ற வளாகத்தை சுத்தப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த மாநில நிதி அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு துடைப்பம் பயன்படுத்தி சுத்தம் செய்ததற்கு 9/10 மதிப்பெண்களும், ஹேமா மாலினிக்கு 0/10 மதிப்பெண்களும் அளித்து அவரது செயலை போலித்தனம் என்றும் நையாண்டி செய்திருந்தார்கள்.

Video Courtesy: Bollywood.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com