வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

உங்கள் கண்களில் கருவளையம் முற்றிலும் நீங்க சில எளிய பயிற்சிகள்!

Published: 16th August 2018 11:41 AM

கருவளையம் கண்களுக்கு திருஷ்டி போல் இருக்கும். சரியாக தூங்காமல், சிறு வயதிலிருந்தே கண்களுக்கு ஓவர் டைம் வேலை கொடுத்து அல்லது எப்பவும் டிவி, மொபைல் என்றிருந்தால்  கண்களைச் சுற்றி கருவளையம் வந்துவிடும்.  

கருவளையம் நரம்புகளின் பலவீனத்தாலும் இறந்த செல்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கிவிடுவதாலும் உண்டாகும். இதனால் சிறு வயதிலேயே வயதான தோற்றம் அமைந்துவிடும்.  இதற்கு கண்களின் மீது  உருளைக் கிழங்கு, வெள்ளரிக்காய்,  தக்காளி என  வைத்தால் பலனளிக்கும்.  

சின்ன சின்ன பயிற்சிகள்  மூலமும் கருவளையத்தைப் போக்கிக் கொள்ளலாம். இந்தப் பயிற்சிகளினால் கண்பார்வை தெளிவாகும். நரம்புகள் ஊக்கம் பெறும், கண்கள் சுருக்கங்கள் மறைந்து  அழகு பெறும்.  

பயிற்சிகளை இப்போது கண்போம்:

பயிற்சி- 1 : கண்களை எவ்வளவு இறுக்க மூட  முடியுமோ, அவ்வளவு இறுக்க மூடி, அதே அளவு திறக்க வேண்டும். இப்படி மூன்று முறை செய்யவும்.       

பயிற்சி- 2 : கண்களை மேலிருந்து வலப்புறமாக சுழற்றவும் இது போல் ஐந்து முறை செய்யவும்.  இடப்புறமாக அதே போன்று  சுழற்றவும். ஐந்து முறை செய்ய வேண்டும்.

பயிற்சி- 3 : இரு கண்களையும் உள்ளங்கையால் மூடி சில நொடிகள் கழித்து திறந்திடுங்கள். இவ்வாறு ஐந்து முறை செய்ய வேண்டும்.

பயிற்சி 4 : இரவு தூங்குவதற்கு முன் கண்களைச் சுற்றி லேசாக கைகளால் ஒத்தி எடுக்க வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். விளக்கெண்ணெய் இருந்தால் அதனை கொண்டு  கண்களைச் சுற்றி மசாஜ் செய்யலாம்.

மேலே கூறியவைகளை விடாமல் தினமும் செய்து கொண்டு வந்தால், சில நாள்களில் கருவளையம் மறைவதை காண்பீர்கள். கண்களும் அழகாக காட்சியளிக்கும்.

Tags : eyes exercise black ring கருவளையம்

More from the section

வெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்!
முகச் சுருக்கம் நீங்கி பொலிவுடன் முகம் ஜொலி ஜொலிக்க!
கவர்ச்சி மட்டுமே அழகல்ல! புகைப்பட நிபுணர் மிஹேலா நோராக் பேட்டி! (படங்கள்)
பெண்களின் முகம் மாசு மருவின்றி ஜொலிக்க பயனுள்ள டிப்ஸ்!
உங்கள் முகம் தெய்விக அழகுடன் தேஜஸாக வேண்டுமா? இதோ டிப்ஸ்