50 வயதிலும் இளமையான, பொலிவான முக அழகு பெற உதவும் பீட்ரூட் அழகுக் குறிப்புகள்!

முல்தானி மெட்டியுடன் சிறிதளவு பீட்ரூட் சாறு பிளஸ் சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றுத் தடவினால் கண்களுக்கு கீழ் விழும் கருவளையங்கள் மறையும்.
50 வயதிலும் இளமையான, பொலிவான முக அழகு பெற உதவும் பீட்ரூட் அழகுக் குறிப்புகள்!

சிலருக்கு பீட்ரூட் பொரியல் செய்தால் சாப்பிடப் பிடிக்கும், சிலருக்குப் பிடிக்காது. காரணம் அதன் அதீத வண்ணம். சமைத்து முடித்த பின்னும், சாப்பிட்டுக் கை கழுவி முடித்த பின்னும் கூட கையை விட்டு அகலாமல் அப்படியே ஒட்டிக் கொள்ளும் அதன் நிறம் சிலருக்கு அலர்ஜியாக இருக்கலாம். அதன் காரணமாக அவர்கள் காய்கறிகள் வாங்கச் செல்கையில் பீட்ரூட்டைத் தவிர்த்து விடுபவர்களாக இருப்பார்கள். அது முற்றிலும் தவறான முடிவு. பீட்ரூட்டின் நிறம் அதனுள் மறைந்திருக்கும் சத்துக்களின் வெளிப்பாடு. அதைத் தவிர்ப்பது கூடாது. பீட்ரூட்டைப் பற்றி முக்கியமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில் ஒன்று அது சருமத்திலுள்ள வியாதிகள் அத்தனைக்கும் மருந்தாகப் பயன்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது என்பது. அது மட்டுமல்ல பீட்ரூட்டில் நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் கூட அதிகமுண்டு. எனவே சருமத்தின் வறட்சியைப் போக்கி பொலிவைத் தூண்டுவதிலும் பீட்ரூட் முன்னிலை வகிக்கிறது.

தேவையான பொருட்கள்...

  • கடலை மாவு = 1 தேக்கரண்டி
  • பீட்ரூட் சாறு - 1 தேக்கரண்டி
  • தயிர் - 1 தேக்கரண்டி
  • ரோஜா இதழ் - சிறிதளவு

ரோஜா இதழை அரைத்து மற்ற எல்லாப் பொருட்களுடன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகம் கழுவி மென்மையாகத் துடைத்தால் முகத்திலுள்ள கருமை மறைந்து முகம் பொலிவு பெறுவதை ஓரிரு தினங்களுக்குள்ளாக உணரலாம்.

2.

முல்தானி மெட்டி ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொண்டு அதனுடன் 1 தேக்கரண்டி பீட்ரூட் சாறு கலந்து முகத்தில் தேய்த்து, கலவை காய்ந்து முகம் இறுக்கம் அடையும் போது குளிர்ந்த நீரால் கழுவி விடுங்கள், இப்படிச் செய்வதால் கன்னங்கள் இரண்டும் ரூஜ் தடவாமலேயே சிவந்த நிறம் கொள்ளுமாம்.

3.

முல்தானி மெட்டியுடன் சிறிதளவு பீட்ரூட் சாறு பிளஸ் சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றுத் தடவினால் கண்களுக்கு கீழ் விழும் கருவளையங்கள் மறையும்.

பீட்ரூட் ஃப்ரூட் ஃபேஸியல்...

தேவையான பொருட்கள்...

  • ஆப்பிள் - அரைப்பழம்
  • கேரட் - 2
  • பீட்ரூட் - 1
  • கடலை மாவு 1 தேக்கரண்டி

செய்முறை:

ஆப்பிள், கேரட், பீட்ரூட்டைத் தோலுரித்து மிக்ஸியில் சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் கடலை மாவையும் சேர்த்து நன்கு கலந்தால் பேஸ்ட் போன்ற வஸ்து கிடைக்கும். பீட்ரூட் ஃப்ரூட் ஃபேஸியல் செய்து கொள்வதற்கு முன்பு முதலில் முகத்தை நன்கு கழுவித் துடைத்து விட்டு மேலே சொல்லப்பட்ட பேஸ்ட்டை சிறிது, சிறிதாக விரலால் தொட்டு முகம் முழுதும் கீழிருந்து மேல் நோக்கி அப்ளை செய்யவும். கண்கள் மற்றும் உதடுகளைத் தவிர்த்து விடலாம். இந்த இயற்கை ஃபேஸ் பேக்கை அப்படியே காய விட்டு 30 நிமிடங்களுக்குப் பிறகு வெது வெதுப்பான நீரால் முகத்தைக் கழுவித் துடைக்கவும். 15 நாட்களுக்கு ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை இதைச் செய்து வந்தால் ஓரிரு வாரங்களுக்குள்ளாகவே முகத்திலுள்ள எண்ணெய்ப்பசையும், வறட்சியும், கருமையும் நீங்கி முகம் பளிச்சிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com