ஃபேஷன்

நிவியா காஸ்மெடிக்ஸின் பிராண்ட் அம்பாஸிடராகிறார் டாப்ஸி பன்னு!

ஹரிணி

இந்தியாவில் பிரபலமான அழகுசாதன தயாரிப்பு நிறுவனங்களில் நிவியாவும் ஒன்று. முகக் கிரீம்கள், சருமத்தை மென்மையாக்க உதவும் மாஸ்ச்சரைஸர்கள், சோப், உள்ளிட்ட பல அழகு சாதனப் பொருட்கள் நிவியா எனும் பிரபல பிராண்ட் லேபிளில் இந்தியாவில் விற்பனையாகிறது. தரமான அழகு சாதனப் பொருட்களைத் தயாரித்தளிக்கும் நிறுவனம் என்றொரு நற்பெயரும் நிவியாவுக்கு உண்டு. டாப்ஸியைப் பொறுத்தவரை நிவியாவுக்கு முன்பே அவர் கூந்தல் தைலம், குளியல் சோப், நகைக்கடை விளம்பரம், புடவைக்கடை விளம்பரம் என 6 க்கும் மேற்பட்ட பொருட்களின் விளம்பரத்துக்காக பிராண்டு அம்பாஸிடராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் நிவியாவும் இந்தியில் இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘பிங்க்’ திரைப்படத்திற்குப் பிறகு ஆல் இந்தியா ஸ்டார் ஆகி விட்ட டாப்ஸிக்கு மக்களிடையே இருக்கும் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு அவரைத் தங்களது அழகு சாதனப் பொருட்களுக்கான பிராண்ட் அம்பாஸிடராகத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்திய மக்களிடையே நீண்ட நெடுங்காலமாக அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு விஷயத்தில் தனிப்பெரும் நம்பிக்கையைச் சாதித்து அதை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நிவியா போன்ற பாப்புலர் பிராண்ட் தன்னை பிராண்ட் அம்பாஸிடராக அணுகியிருப்பது பெருமைக்குரிய விஷயம் தான் என்று குறிப்பிட்டு நிவியா அளித்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டுள்ளார் டாப்ஸி.

ஆகவே, இனிமேல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிவியா காஸ்மெடிக் விளம்பரங்களில் டாப்ஸி தவறாது இடம்பிடிப்பார் என நம்பலாம்.

தற்போது இந்தியில் ‘மன்மரிஸான்’ திரைப்படத்தில் அபிஷேக் மற்றும் விக்கி கோஷலுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் டாப்ஸியின் கையில் மேலும் சூர்மா, முல்க் எனும் இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இரண்டில் ‘சூர்மா’ விளையாட்டு வீரர் சந்தீப் சிங்கின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு வெளிவரவிருக்கும் பயோ பிக் ரகத் திரைப்படம். இதில் டாப்ஸி தொழில்முறை ஹாக்கி வீரங்கனையாக நடித்து வருகிறார். இது தவிர ரிஷி கபூர் தயாரிப்பில் பிரதிக் பாப்பருடன் ஜோடியாக முல்க் என்ற இந்தித் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் டாப்ஸி மிகச் சுறுசுறுப்பாக விளம்பரப் படங்கள், தென்னிந்திய திரைப்படங்கள், இந்தித் திரைப்படங்கள், என சூறாவளியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT