ஜஸ்ட் 5000 ரூபாய் தானாம் இந்த ஸ்டைல் ஹேர் கட்டுக்கு!

இவற்றில் எந்த வகை ஹேர் கட் உங்களுக்குத் தேவையோ, அதை நீங்கள் உங்கள் பர்ஸின் கனத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.
ஜஸ்ட் 5000 ரூபாய் தானாம் இந்த ஸ்டைல் ஹேர் கட்டுக்கு!

ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஹேர் கட்டிங்கில் பலவிதமான டிஸைன்கள் வந்து விட்டன. சில வருடங்களுக்கு முன்பு ஸ்டெப் கட், லேயர் கட், ஃபெதர் கட் எல்லாம் ட்ரெண்டிங்கில் இருந்தது. இப்போது பார்த்தால் ஃபையர் கட்டில் வந்து நிற்கிறது. யூடியூப் சேனல் ஒன்றில் அவ்விதமான ஹேர் கட் தமிழ்நாட்டிலும் வந்து விட்டதைப் பார்க்கையில் வேடிக்கையாக இருந்தது. தீ பட்டால் தலைமுடி தாங்குமா? கருகி நிறம் மாறி விடாதா? இதென்ன கோமாளித்தனம் என்று தானே தோன்றுகிறது. ஆனால், தேர்ந்த ஹேர் ஸ்டைலிஷ்ட் கொண்டு ஃபயர் ஹேர் கட் செய்துகொள்வது கொஞ்சம் த்ரில்லிங்காகத் தான் இருக்கும் போல. பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், பின்விளைவுகளை யோசித்தால் பயமாய் இருக்கிறது.

ஃபயர் ஹேர் கட்டால் ஏதேனும் ஆபத்து உண்டா? என்று கூகுளில் தேடிப்பார்த்ததில், நல்ல ஹேர் ஸ்டைலிஸ்ட் வாய்த்து விட்டால், பெரிதாக அப்படி ஒன்றும் ஆபத்து இல்லை என்று தான் சொல்கிறது கூகுள். ஆனா, தேர்ந்த ஹேர் ஸ்டலிஸ்ட் சிக்க வேண்டுமே?! 

இந்த செய்தியைப் பார்த்து விட்டு உங்களில் யாருக்கேனும் இந்த விதமாக ஹேர் கட் செய்து கொள்ளத் தோன்றினால் தயவு செய்து நல்ல ஹேர் ஸ்டலிஸ்டாகத் தேடிச் சென்று செய்து கொள்ளுங்கள். அனுபவமில்லாதவர்களிடம் சென்று மாட்டிக்கொண்டு மொத்தமாக தலைமுடியைத் தீய்த்துக்கொண்டு விடாதீர்கள்.

ஃபயர் ஹேர் கட் செய்து கொள்வதால் நெருப்பில் காட்டப்படும் முடிப்பகுதி தான் கருகுமே தவிர மீண்டும் வேரில் இருந்து புதிய முடி வளர்ந்து வருவதற்குத் தடை எதுவும் இல்லையாம். இந்த வகை ஹேர் ஸ்டைலுக்கு ஒருமுறை முயற்சித்து விட்டவர்கள் மீண்டும் புதிய ஸ்டைலுக்கு மாற வேண்டும் என்றால், உங்களது ஃபயர் ஹேர் கட் முடிகளைக் கட் செய்து நீக்கிக் கொண்டால் மட்டுமே புதிய முடி வளர்ச்சி ஏற்பட முடியும். ஒரு முறை தீய்ந்து போன முடி தீய்ந்தது தான், அது மீண்டும் வளர வாய்ப்புகள் இல்லை என்பதை மனதில் வையுங்கள். இதை அயல்நாடுகளில் கேண்டில் ஹேர் கட் என்றும் சொல்கிறார்கள்.

இர்ஃபான்ஸ் வியூ யூ டியூப் சேனலை நடத்தி வரும் இர்ஃபான் என்ற இளைஞர் இந்த விதமான ஹேர் ஸ்டைலை முயன்று விட்டு அதை காணொலியாகவும் இணையத்தில் பகிர்ந்திருக்கிறார். பார்க்க படு வேடிக்கையாக இருக்கிறது. மதுரையில் இருக்கும் சலூன் ஒன்றில் இந்த விடியோ எடுக்கப்பட்டிருக்கிறது. 

  • இதில் பொடுகு நீக்குதல் ஃபயர் ஸ்பா
  • தலை முடி கொட்டாமல் இருக்க ஃபயர் ஸ்பா
  • ஃபயர் ஸ்மூத்தனிங்
  • ஃபயர் ஸ்ட்ரெயிட்டனிங் என்று பல்வேறு சாய்ஸ்கள் வேறு உண்டு.

இவற்றில் எந்த வகை ஹேர் கட் உங்களுக்குத் தேவையோ, அதை நீங்கள் உங்கள் பர்ஸின் கனத்துக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கலாம்.

இந்த காணொலியில் இதை முயன்று பார்த்த இர்ஃபான், ஃபயர் ஹேர் கட் ரொம்ப எக்ஸ்பென்சிவ். அவ்வளவு செலவு செய்து இப்படி ஒரு அனுபவத்தை பெற வேண்டுமா? என்றதோடு ஹேர் கட் செய்துகொண்ட பல மணி நேரங்களுக்குப் பிறகும் கூட முடி தீய்ந்த வாசம் வேறு துரத்துகிறது என்கிறார். அத்துடன் இந்த வகை ஹேர் கட்டிங்கில், ஹேர் கட்டுக்கு முன்பும், பின்பும் திருப்தியான மாற்றங்களென எதுவும் கிடைக்காத காரணத்தால் இதை முயற்சிப்பதற்கு முன்பு ஒருமுறை யோசித்து விட்டு பிறகு பர்ஸைத் திறங்கள் என்கிறார்.

இந்த ஹேர் கட்டுக்கு அப்படி என்ன செலவாகி விடப்போகிறது என்று தோன்றுமே? அதிகமில்லை ஜஸ்ட் 5000 ரூபாய் தானாம் இந்த ஹேர் கட்டுக்கு.

ஒருமுறை நீங்க ட்ரை பண்றீங்களா பாஸ்?!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com