மொறு மொறு வடை எப்படி தயாரிப்பது?

மிக்ஸியில் அரைக்க நேர்ந்தால், அதன் பிளேடுகளில் நடுவில் சிறிதளவு எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.
மொறு மொறு வடை எப்படி தயாரிப்பது?

தேவையானவை :

உளுந்து - 1 கப்
பச்சை மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை 

  • உளுந்தை ஊற வைக்கவும்
  • ஊற வைத்த உளுந்து, பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை க்ரைண்டரில் மையாக அரைக்கவும்
  • இந்த மாவில் கறிவேப்பிலை மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக கிளறவும்
  • அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை எண்ணெயை காய வைக்கவும். 
  • உள்ளங்கை அளவு மாவை எடுத்துக் கொண்டு அதைச் சிறு உருண்டையாக்கி அதன் பின் வட்டமாகத் தட்டவும்.
  • அதன் நடுவில் தண்ணீர் தொட்டு துளை போடவும்
  • இப்போது வடை மாவை வாணிலியில் போடவும்.
  • இருபுறமும் பொன்னிறமாக வேகவிட்டபின் எடுத்து தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்
  • பொடியாக‌ நறுக்கிய கீரையை சேர்த்து அரைத்து கீரை வ‌டையாக‌வும் சுட‌லாம்.

சில டிப்ஸ்

மாவை நைசாக அரைக்க வேண்டும். எந்தளவுக்கு என்றால் அரைத்து முடித்ததும் சிறிதளவு மாவை கையில் எடுத்துக் கொண்டு ஊதினால் அது பஞ்சு போல் பறக்க வேண்டும். அப்படி அரைத்த மாவில் வடை சுட்டால் மொறு மொறுவென்று அதிக ருசியில் வடை சூப்பராக இருக்கும்.

மொறு மொறுவென்று வடை தயாரிக்க ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம்.

வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகிவிட்டால் பொரிக்கும் போது அதிக எண்ணை குடிக்கும். எனவே அளவாக நீர் விடவும். மேலும் மிக்ஸியில் அரைப்பதை விட க்ரைண்டரில் அரைப்பது சுவை அதிகமாக இருக்கும். 

மிக்ஸியில் அரைக்க நேர்ந்தால், அதன் பிளேடுகளில் நடுவில் சிறிதளவு எண்ணை விட்டால் சிக்காமல் அரையும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com