வாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி சூப்!

வாய் புண்ணை குணமாக்கும் மணத்தக்காளி சூப்!

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு,

மணத்தக்காளி சூப்

தேவையான பொருட்கள்:

மணத்தக்காளி கீரை - 1 கட்டு
பாசிப் பருப்பு  -100 கிராம்
தக்காளி - 1
வெங்காயம் - 1
பூண்டு - 5 பல்
மிளகு - சிறிது
சீரகம்  - சிறிது
கடுகு - சிறிது
கறிவேப்பிலை  - சிறிது
எண்ணெய் - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை வெங்காயம் போட்டு தாளித்து அதனுடன் பூண்டு, தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின் கீரையை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வாணலியில் சேர்த்து பின் மிளகு, சீரகம் சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி அரைத்துக் கொள்ளவும். பாசிப்பயிறை வேகவைத்து மசித்து  கீரையுடன் சேர்த்து கொதிக்க விட்டு உப்பு சேர்த்து பரிமாறவும். மணத்தக்காளி சூப் ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com