மொறு மொறு பனீர் நட்ஸ் தோசை பிடிக்குமா? இதோ ரெசிபி!

தோசை தவாவில்  1 கரண்டி தோசை மாவை ஊற்றி பரப்பிவிட்டு துருவிய பனீரை தூவி
மொறு மொறு பனீர் நட்ஸ் தோசை பிடிக்குமா? இதோ ரெசிபி!

பனீர் -நட்ஸ் தோசை

தேவையானவை:
தோசை   மாவு - 1 கிண்ணம்
பனீர் - 1 கிண்ணம்
ஒன்று இரண்டாக  பொடித்த 
பாதாம்,  பிஸ்தா,  முந்திரி  -  1 கிண்ணம்  

செய்முறை:

தோசை தவாவில்  1 கரண்டி தோசை மாவை ஊற்றி பரப்பிவிட்டு துருவிய பனீரை தூவி,  தோசையைச்  சுற்றிலும் லேசாக எண்ணெய்யை ஊற்றி, மிதமான சூட்டில் மொறு மொறு   என்று வார்க்கவும் பின்னர், தோசையை எடுக்கும் பொடித்த வைத்துள்ள  நட்ûஸ 1 தேக்கரண்டி எடுத்து தோசையில்  தூவி, மடித்து எடுக்கவும். சுவையான பனீர், நட்ஸ் தோசை தயார். 

இதற்கு தொட்டுக் கொள்ள கொத்துமல்லிச் சட்டி சுவையாக இருக்கும். 

கொத்துமல்லி  சட்னி

தேவையானவை:
கொத்துமல்லித்தழை -1/2 கட்டு
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
பச்சைமளகாய் - 3
தக்காளி  - 2 நறுக்கியது
உப்பு - தேவையான  அளவு.
தாளிக்க:
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு, பெருங்காயப் பொடி - 1தேக்கரண்டி
 

செய்முறை:  

ஆய்ந்த கொத்துமல்லித் தழை, பச்சைமிளகாய், தக்காளி ஆகியவற்றை லேசாக வதக்கிக் கொள்ளவும். பின்னர், தேங்காய்த் துருவலுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும் சுவையான கொத்துமல்லி சட்னி தயார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com