புதன்கிழமை 14 நவம்பர் 2018

கண்ணிமைக்கும் நேரத்தில் தயார்... ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் ‘பட்டடாஸ் பிரவாஸ்’

By கஸ்தூரி ராஜேந்திரன், தேனி.| DIN | Published: 28th August 2018 11:40 AM

 

குழந்தைகள் பள்ளி விட்டு வீடு திரும்பும் நேரத்தில், தினம், தினம்  புதிது புதிதாக அவர்களுக்கு எதைத்தான் சமைத்துக் கொடுப்பது? என்று பெரும்பாலான அம்மாக்களுக்கு குழப்பம் இருக்கலாம். காரணம் நம் குழந்தைகளின் சலிப்பு... என்னம்மா இது? எப்போப்பார் ஒரே மாதிரி முறுக்கு, சீடை, வடை, அதிரசம், இப்படியே செய்து வைக்கறீங்க. என் ஃப்ரெண்டோட அம்மா அவளுக்கு இத்தாலியன், ஸ்பானிஷ், சைனீஸ் ஐட்டமெல்லாம் செஞ்சு கொடுத்து அசத்தறாங்க தெரியுமா? எனக்கும் அதெல்லாம் சாப்பிடனும்னு ஆசையா இருக்கும்மா... எங்கம்மாவுக்கும் அதெல்லாம் செய்யத் தெரியும்னு காட்டனும்னு ஆசையா இருக்கும்மா, என்று மகனோ, மகளோ முகவாயைப் பிடித்து கெஞ்சிக் கொஞ்சும் போது நமக்குள்ளும் ஒரு புது உத்வேகம் வரத்தான் செய்கிறது புதிது, புதிதாய் சமைத்து அசத்த. இதோ அப்படியான ஐட்டங்களில் ஒன்று தான் இந்த ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் ‘பட்டடாஸ் பிரவாஸ்’ சமைக்கறது ரொம்ப ஈஸி. செய்து பாருங்களேன்.

தேவையான பொருட்கள்:

செய்முறை: 

முதலில் உருளைக் கிழங்குகளை நன்கு கழுவித் துடைத்து விட்டு அவற்றின் மேற்புறத்தையும், கீழ்புறத்தையும் வெட்டி நீக்கி விட்டோமென்றால் ஒரு ஒழுங்கான உருளை வடிவம் கிடைக்கும்.  . இப்போது அதன் தோலை நீக்கி விட்டு கிழங்குகளின் மேற்புறத்தில் அச்சுகளைப் பயன்படுத்தி குழி இடவும். பின்பு வாணலியில் எண்ணெய் காய வைத்து பொன்னிறத்தில் பொரித்தெடுக்கவும். உருளைக் கிழங்குகளைப் பொரித்து எடுத்ததும் சூடு ஆறும் முன் அதன் மேற்புறம் உள்ள குழியில் 1/4 டீஸ்பூன் சில்லி சாஸ் அதன் மேல் 2 டீஸ்பூன் மயோனைஸ் சாஸ் சேர்த்து டாப்பிங் செய்து அதன் மேல் கறிவேப்பிலை அல்லது புதினா ஃப்ளேக்ஸ் தூவிப் பரிமாறவும். இது தான் ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் ‘பட்டடாஸ் பிரவாஸ்’ செய்யும் முறை. சூடாகச் சாப்பிடும் போது நன்கு மொறுமொறுவென இருக்கும் இதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.


மயோனைஸ் சாஸ் வீட்டில் தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்:

செய்முறை: 

வீட்டு மிக்ஸியில் முதலில் முட்டைகளை உடைத்து ஊற்றி 2 நிமிடம் சுற்ற விட்டு நன்கு கலந்து கொள்ளவும். பின் அதனுடன் 1 டீஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டீஸ்பூன் கடுகுத் தூள், 1 சிட்டிகை மிளகுத்தூள் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் நன்கு அடிக்கவும். பிறகு எடுத்து வைத்துள்ள எலுமிச்சைச் சாறு சேர்த்து மெதுவாக இருமுறை மிக்ஸியைச் சுற்ற விட்டு நிறுத்தவும். இப்போது எண்ணெய் சேர்க்கும் நேரம். எண்ணெயை அப்படியே மொத்தமாகச் சேர்க்க முடியாது. சிறிது, சிறிதாக மிதமான வேகத்தில் மிக்ஸியைச் சுற்ற விட்டு நான்கைந்து தவணைகளில் எண்ணெய் சேர்த்துச் சேர்த்து மிக்ஸியைச் சுற்ற விட்டு எடுத்தால் திக்கான எக் மயோனைஸ் தயார். உணவகங்களில் நாம் ரசித்து உண்ணும் மயோனைஸ் சாஸ் இப்படித்தான் தயாரிக்கப்படுகிறது. நாம் வீட்டிலும் அதைத் தயாரிக்க முடியும். 

ஸ்பானிஷ் பட்டடாஸ் பிரவாஸ்க்கு மிகச்சிறந்த டாப்பிங் கார்லிக் மயோனைஸ் என்கிறார்கள்.

நீங்கள் உங்களுக்குப் பிடித்த எந்த ஃப்ளேவரிலும் மயோனைஸ் தயாரிக்கலாம்.

அவ்ளோ தாங்க  ‘பட்டடாஸ் பிரவாஸ்’... செய்து ருசிச்சிட்டு உங்கள் ருசி அனுபவத்தை dinamani.readers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் எங்களுக்கு எழுதுங்க.

Tags : பட்டடாஸ் பிரவாஸ் ஸ்பானிஷ் ஸ்பெஷல் ஸ்டார்ட்டர் லைஃப்ஸ்டைல் ரசிக்க ருசிக்க spanish special starter pattatas biravaS

More from the section

பட்டாசு வெடிக்கிறீங்களோ இல்லையோ தீபாவளி லேகியம் செய்து சாப்பிட மறக்காதீங்க!
தீபாவளி ரெசிபி! ரிப்பன் பக்கோடா (ரிப்பன் முறுக்கு)
தீபாவளி ரெசிபி! ரசகுல்லா
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்! 
சுவையமுதம், பனஞ்சுவைப் பெட்டகம் என 12 வகை பாரம்பரிய தீபாவளி இனிப்புப் பெட்டகங்களுடன் அசத்தும் புது இணையதளம்!