சனிக்கிழமை 17 நவம்பர் 2018

முறுக்கு அதிக மொறு மொறுப்புடன் இருக்க இதோ டிப்ஸ்!

DIN | Published: 29th August 2018 02:34 PM

பட்சண டிப்ஸ்.. 

முறுக்குக்கு மாவு பிசையும்போது அதில் ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்தால் முறுக்கு அதிக மொறு மொறுப்பு தன்மையுடன் இருக்கும்.

கடலை எண்ணெய்யில் பலகாரம் செய்யும்போது கடலை எண்ணெய்யை முதலில் நன்றாக புகை வரும்வரை சூடேற்றி பின் தெளிய வைத்து இறுத்துக் கொண்டு அதில் பலகாரம் செய்தால் கடலை எண்ணெய் வாடை ஒரு துளியும் இருக்காது.

மைசூர்பாகு இரண்டுவிதமாக செய்யலாம். நெய்விட்டு செய்தால் இளகின பதத்தில் எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் வாயில் போட்டதும் கரையும். டால்டா அல்லது ரீபைண்ட் எண்ணெய்யில் செய்தால் முற்றிய பதம் வர வேண்டும். அப்போதுதான் கரகரப்பாக இருக்கும்.

இனிப்பு வகைகள் செய்யும்போது கட்டாயம் ஏலக்காய்த் தூள் தேவைப்படும். ஒவ்வொரு முறையும் ஏலக்காயைப் பொடி செய்வதை விட வாணலியில் ஏலக்காயை சூடு வரும் வரை லேசாக வறுத்து பிறகு மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும்போது உபயோகித்துக் கொள்ளலாம்.

லட்டுக்குப் பாகு எடுக்கும்போது கம்பிப்பாகு பதத்தில் எடுத்துவிட வேண்டும். அதுபோன்று பூந்தி முத்துகள் முழுசாக வெந்துவிடாமல் முக்கால் பாகம்தான் வெந்திருக்க வேண்டும். முழுசாக வெந்துவிட்டால் காராபூந்தி பதத்துக்கு வந்துவிடும். பூந்தியைப் பாகில் கலந்தவுடன் சூட்டோடு உருண்டை பிடித்துவிட வேண்டும்.
 

- ஆர்.ஜெயலட்சுமி 

சமையல் டிப்ஸ்... 

புளியோதரை செய்யும்போது வறுத்த வேர்க்கடலையைச் சேர்த்தால் சுவை அதிகம் இருக்கும்.

முருங்கைக்கீரையுடன் கேரட் துருவல், பீன்ஸ், பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து பொரியல் செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

பணியாரம் செய்யும்போது மாவில் சிறிது ஆப்பசோடா கலந்தால் பொசுபொசுவென இருக்கும்.

முறுக்கு தயார் செய்யும்போது தேங்காய்ப்பால்,வெண்ணெய் மாவுடன் கலந்தால் மொறுமொறுவென இருக்கும். 
- ஆர். பிரபா

Tags : snacks tips cooking tips சமையல் டிப்ஸ் முறுக்கு டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்

More from the section

உங்கள் உணவில் சுவை இருக்கலாம் அறுசுவை உள்ளதா?
பட்டாசு வெடிக்கிறீங்களோ இல்லையோ தீபாவளி லேகியம் செய்து சாப்பிட மறக்காதீங்க!
தீபாவளி ரெசிபி! ரிப்பன் பக்கோடா (ரிப்பன் முறுக்கு)
தீபாவளி ரெசிபி! ரசகுல்லா
கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத் வீட்டில் தயாரிக்க எளிய டிப்ஸ்!