ரசிக்க... ருசிக்க...

அடைக்குப் பொருத்தமான அவியல் ரெசிப்பி!

கஸ்தூரி ராஜேந்திரன்

தேவையான பொருட்கள் :

  • அவரைக்காய் - நூறு கிராம்
  • கத்தரிக்காய் - நூறு கிராம்
  • பீன்ஸ் - நூறு கிராம்
  • சேப்பங்கிழங்கு - நூறு கிராம்
  • உருளைக் கிழங்கு - ஒன்று
  • முருங்கை காய் - ஒன்று
  • வாழைக்காய் - ஒன்று
  • புடலங்காய் - நூறு கிராம்
  • தேங்காய் - அரை மூடி
  • கெட்டித் தயிர் - ஒரு கப்
  • பச்சை மிளகாய் - பத்து
  • சீரகம் - இரண்டு டீ ஸ்பூன்
  • கருவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
  • தேங்காய் எண்ணெய் - கால் கப்

அவிக்க...

முதலில் சொல்லப் பட்ட காய்கறிகளையும்,கிழங்கு வகைகளையும் அளவில் சற்றே பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும் ,பிறகு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து தேவையான உப்பு சேர்த்து காய்கள் முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி மேலாக ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு குக்கரில் இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும் .வேக வைக்கப் பட்ட காய்கறிகளை எடுத்து அதிலிருக்கும் நீரை வடிகட்டி பிரிக்கவும்.

அரைக்க...

அரை மூடி தேங்காயை துருவி அல்லது நறுக்கி அதனோடு இரண்டு டீ ஸ்பூன் சீரகம் பத்துப் பச்சை மிளகாய்கள் சேர்த்து மையாக அரைத்து எடுத்து ஒரு கப் கெட்டித் தயிரில் கலந்து வைத்துக் கொள்ளவும் .

அவியல்:

அரைத்து எடுத்த தேங்காய் தயிர் கலவையில் முன்பே வேக வைத்து எடுத்துக் கொண்ட காய்கறிகளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விட்டு இறுதியாக தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு கைப்பிடி கருவேப்பிலையும் தூவி கிளறி விட்டு இறக்கிப் பரிமாறலாம் .இதற்க்கு தாளிதம் அவசியமில்லை.

அடைக்கு மிகப் பிரமாதமான சைடு டிஷ் அவியல் தான், அருமையான காலை டிபனுக்கு அடை அட்டகாசமாய்பொருந்தும், நிறையக் காய்கறிகளும் பருப்புகளும் கலப்பதால் நல்ல சத்து மிக்க உணவும் கூட.

குறிப்பு :-

இன்னும் நிறைய காய்கள் சேர்த்துச் செய்ய விரும்பினால் அப்படியும் சேர்க்கலாம். என்னென்ன காய்கள் சேர்க்க வேண்டும் என்பது சாப்பிடுபவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது.

அடையைத் தயிர் கலந்தும் செய்யலாம், ஆனால் அது ஒரு முழுநாள் வைத்திருந்து சாப்பிடுவதற்கு மட்டுமே உகந்தது. அதையே தயிருக்குப் பதிலாகப் புளிக்கரைசல் சேர்த்து செய்தீர்கள் எனில் மறுநாளும் வைத்திருந்து உண்ணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT