ரசிக்க... ருசிக்க...

சட்டுன்னு ஒரு ஸ்னாக்ஸ், ராஜஸ்தானி ஸ்பெஷல் ஸ்வீட் ‘மால்புவா’ செய்யுங்களேன்!

கஸ்தூரி ராஜேந்திரன்

மாலையில் பள்ளி விட்டு வீடு வரும் குழந்தைகள் மிகுந்த சோர்வுடன் இருப்பார்கள். அவர்களை உற்சாகப் படுத்த தினமொரு மாலை நேர ஸ்னாக்ஸ் செய்து கொடுத்து அசத்தலாம். ஒரே விதமாக நம்முடைய கைமுறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கும் கூட இது கொஞ்சம் மாற்றமாக இருக்கும். அட போங்க இந்த தலைமுறை குழந்தைகள் எங்கே டிரடிஷனல் ஸ்னாக்ஸ் எல்லாம் சாப்பிட விரும்பறாங்க, அவங்களுக்கு ஜங்க் வகையறா ஸ்னாக்ஸ் ஐட்டங்களான கேக், பிரெட் டோஸ்ட், லேய்ஸ் சிப்ஸ், குர்குரே, அசைவம்னா சிக்கன் லாலிபாப், மட்டன் கபாப் தானே பிடிச்சிருக்கு. இப்படி புதுசா வீட்ல ஏதாவது ஸ்பெஷல் டிரெடிஷனல் ஸ்னாக்ஸ் எல்லாம் செய்து வச்சா சீண்டகூட மாட்டாங்க. அப்புறம் அதையும் பெரியவங்களே சாப்பிட்டுத் தீர்த்து உடல் எடையைக் கூட்டிக்க வேண்டியது தான் என்று புலம்பத் தொடங்கி விடாதீர்கள்.

அது மூன்று வேளைச் சாப்பாடாக இருக்கட்டும் அல்லது மாலை ஸ்னாக்ஸாக இருக்கட்டும், பெரியவர்களும் குழந்தைகளுடன் அமர்ந்து ஒரு அரை மணி நேரமாவது கதை பேசிக் கொண்டே அவர்களைச் சிரிக்க வைத்து நீங்களும் உண்டு, அவர்களையும் உண்ண வைத்துப் பழகுங்கள். பிறகெப்படி எந்தத் தலைமுறை குழந்தைகளும் கூட இத்தனை அருமையான ஸ்னாக்ஸுகளை சீண்டாமல் இருப்பார்கள் என்று பார்க்கலாம். எல்லாம் பழக்கத்தில் வருவது தான். அதற்கு பெரியவர்கள் சோம்பினால் பிறகு குழந்தைகளை நொந்து என்ன பயன்?

இந்த ராஜஸ்தானி மால்புவா ரெஸிப்பியிலிம் கூட மைதா பயன்படுத்தப் படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. மைதாவுக்குப் பதிலாக கோதுமை மாவைப் பயன்படுத்தியும் கூட இதே ரெஸிப்பியை முயன்று பாருங்கள். நிச்சயம் சுவையுடனே இருக்கும். சாப்பிடும் போது ஒன்று அல்லது இரண்டு துண்டுகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் இது சுகர் சிரப்பில் ஊற வைத்துச் செய்யும் ஸ்னாக் என்பதால் குழந்தைகளுக்கு புழுத்தொல்லை வந்து விடக்கூடாது.

தேவையான பொருட்கள்:

  • மைதா - அரை கப்
  • பால் பெளடர் - அரை கப்
  • ஏலம் சேர்த்து பொடித்த சர்க்கரை: தேவையான அளவு
  • பால்- 1 கப் 

மேற்கண்ட பொருட்களை எல்லாம் ஒரு பாத்திரத்தில் கொட்டி... மாவை கட்டி இல்லாமல் தோசை மாவு பதத்தில் நன்கு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

சுகர் சிரப் தயாரிக்க...

ஒரு சிறு பாத்திரத்திரத்தில் 1 கப் சர்க்கரை எடுத்துக் கொண்டு அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். சர்க்கரை கரைந்ததும் அதை வடிகட்டி விட்டு சுகர் சிரப்பை மீண்டும் அடுப்பிலேற்றி காய்ச்சத் தொடங்குங்கள். மால்புவாவுக்கு சுகர் சிரப் தயாரிக்க கம்பிப் பதம் தேவையில்லை, பிசுக்குப் பதம் வந்தால் போதும். அதனுடன் ஒரு சிட்டிகை ஏலாக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்.

மால்புவா செய்முறை...

பிறகு அடுப்பில் வாணலியை ஏற்றி பொரிக்கத் தேவையான அளவு நெய் விட்டு, நெய் காய்ந்ததும்  அடுப்பை சிம்மில் வைத்து தோசை மாவு பதத்தில் கரைத்து வைத்த மாவை கரண்டியில் அள்ளி சிதறாமல் மினி ஊத்தாப்பம் போல நெய்யில் ஊற்றிப் பொரித்து எடுக்கவும். இதை ஒவ்வொன்றாகத்தான் பொரித்தெடுக்க வேண்டும், மால்புவா பொன்னிறமாகப் பொரிந்ததும் அதை எடுத்து நெய்யை வடித்து விட்டு காய்ச்சி தயாராக வைத்திருக்கும் சுகர் சிரப்பில் போட்டு 5 நிமிடங்கள் ஊற விட்டு எடுத்து பிளேட்டில் அடுக்கி அதன் மீது அலங்காரமாக பாதம் மற்றும் முந்திரி, பிஸ்தா நொறுக்குகளைத் தூவிப் பரிமாறலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் கூட மிகப்பிடித்த ஸ்னாக்ஸ் வகைகளில் ஒன்று இந்த ராஜஸ்தானி மால்புவா! மாதம் ஒருமுறை இதைச் செய்து கொடுத்தால் குழந்தைகள் ரசித்து உண்பார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT