அப்பம் தெரியும், ஓட்டையப்பம் ருசித்திருக்கிறீர்களா? இதோ ரெசிபி!

மிக்ஸியில் பச்சரிசி மாவை தண்ணீர் விட்டு அரைக்கவும். பின்னர், தேங்காய்த் துருவல்
அப்பம் தெரியும், ஓட்டையப்பம் ருசித்திருக்கிறீர்களா? இதோ ரெசிபி!

ஓட்டையப்பம் 

தேவையானவை:

பச்சரிசி மாவு - கால் கிலோ 
சாதம் - 1 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 1கிண்ணம்
முட்டை - 2
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - தேவைக்கேற்ப

செய்முறை: மிக்ஸியில் பச்சரிசி மாவை தண்ணீர் விட்டு அரைக்கவும். பின்னர், தேங்காய்த் துருவல், சாதம் இரண்டையும் சேர்த்து அரைக்கவும். பின்னர், முட்டையை நன்கு அடித்து, 1 சிட்டிகை சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர், தோசை தாவாவில் சிறிது மாவை எடுத்து ஊற்றி தோசை சுடுவது போன்று சுட்டெடுக்கவும். (ஒட்டாடை செய்வதற்கென்றே ஒருவகையான மண் சட்டி உள்ளது. அதிலும் செய்யலாம்) சுவையான ஓட்டையப்பம் ரெடி. 

- பாத்திமா பீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com