பஹாரா சோறும் தாராபுரம் பேனியானும்!

குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
பஹாரா சோறும் தாராபுரம் பேனியானும்!

பஹாரா சோறு

தேவையானவை:

பாஸ்மதி அரிசி - 1 கிலோ
பெரிய வெங்காயம் - 250 கிராம்
தக்காளி - 2
இஞ்சி - 1 பெரிய துண்டு
பூண்டு - 2
பச்சை மிளகாய் - 5
புதினா, கொத்துமல்லி - 1 கைப்பிடி
கிராம்பு - 6
ஏலக்காய் - 3
தயிர் - 50 கிராம்
சமையல் எண்ணெய் - 200 மில்லி
உப்பு - தேவையான அளவு

செய்முறை: குக்கரில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும். அதனுடன் பெரிய வெங்காயத்தையும் சேர்த்து கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கும்போது. தக்காளி, புதினா கொத்துமல்லி சேர்த்துக் கொள்ளவும்.அடுத்து, தயிர் சேர்க்கவும். பின்னர் ஒரு பங்கு அரிசிக்கு ஒன்னேகால் அளவில் தண்ணீரை ஊற்றி, அரிசியைப் போடவும். தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடிவிடவும். 2 விசில்விட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் சாதத்தை எடுத்து பரிமாறவும். 

***

தாராபுரம் பேனியான்

தேவையானவை:

மைதா மாவு - 1 கிண்ணம்
சர்க்கரை - 200 கிராம்
வெண்ணெய் - சிறிதளவு
எண்ணெய்- அரை லிட்டர்
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 1சிட்டிகை

செய்முறை: மைதா மாவுடன் சர்க்கரை, 1 சிட்டிகை உப்பு , சிறிதளவு நெய் சேர்த்து பூரி மாவுப் பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். பின்னர் வெண்ணெய்யுடன் 2 தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் பிசைந்து வைத்துள்ள மைதா மாவை பூரிகளாக திரட்டவும். அதன்மீது வெண்ணெய்யைத் தடவவும். பின்னர், சிறிய கத்தியால் நீட்டு வாக்கில் துண்டுகளாக்கி, அதனை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, உருட்டி மீண்டு லேசாக தேய்க்கவும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரியை சுட்டு எடுக்கவும். அதன் மீது சர்க்கரையை லேசாக தூவவும். சுவையான பேனியான் தயார்.

- பாத்திமா பீ

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com