ரசிக்க... ருசிக்க...

கரம் மசாலா வீட்டில் செய்யும் முறை

DIN

வரகரிசி வெஜ் பிரியாணி

தேவையானவை:

வரகரிசி - 1/2 கிலோ, கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி (அனைத்தும் சேர்த்து) - 1/4 கிலோ, வரமிளகாய்-5, வெங்காயம்- 5, தக்காளி- 4, இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம், கரம் மசாலா-2 சிட்டிகை, உப்பு- தேவைக்கேற்ப, நெய் -25 கிராம்.

செய்முறை : பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய வெங்காயம், பொடித்த மிளகாய், நறுக்கிய தக்காளியைப் வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது கரம் மசாலாவை சேர்த்து வாசம் வரும் வரை வதக்கவும். பின்னர், நறுக்கிய காய்கறிகளைப் சேர்த்து வதக்கி ஒன்றுக்கு இரண்டேகால் பங்கு நீர் சேர்த்து கொதிக்கவிடவும். இதற்கிடையில், வரகரிசியை கழுவி நீரை வடித்துவிட்டு (அதிக நேரம் அரிசி ஊற வேண்டியதில்லை) வைக்கவும். காய்கள் பாதி வெந்ததும் அரிசி, தேவையான உப்பு சேர்த்து மூடி விடவும். (அரிசி பழுப்பு நிறமாக இருக்கும். இதுவே இயற்கையானது என்பதால் மஞ்சள் தூள் தேவையில்லை) அடுப்பை சிம்மில் வைத்து தம் போட்டு வேக விடவும். அரிசி வெந்ததும் அடுப்பை நிறுத்தி மேலே நெய் சேர்த்து மூடி விடவும். இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள சுவை கூடும் .

கரம் மசாலா வீட்டில் செய்யும் முறை

தேவையானவை:

அன்னாசிப் பூ, கல்பாசி , பிரிஞ்சி இலை, ஜாதி பத்திரி, மராட்டி மொக்கு, பட்டை, லவங்கம், ஏலக்காய் - இவை அனைத்திலும் 10 கிராம் அளவு எடுத்து நன்கு காய வைத்து மிக்ஸியிலிட்டு பொடித்து கொள்ளவும். கரம் மசாலா தயார்.

குதிரைவாலி தக்காளி பிரியாணி

தேவையானவை:

குதிரைவாலி அரிசி - 1/2 கிலோ, தக்காளி - 1/4 கிலோ, முந்திரி -50 கிராம், வரமிளகாய் - 5, வெங்காயம் - 4, இஞ்சி பூண்டு விழுது - 50 கிராம், கரம் மசாலா - 2 சிட்டிகை , நெய் - 25 கிராம், உப்பு - தேவைக்கு

செய்முறை : வெஜ் பிரியாணி செய்யும் அதே முறைதான் இதற்கும். ஆனால் காய்கள் இருக்காது. தக்காளி அதிகம் நீர்விடும் என்பதால் அரிசிக்குத் தகுந்த நீர் மட்டும் சேர்க்கவும். முந்திரியை நெய் காய்ந்ததும் முழுதாகவே போடலாம். காரம் வேண்டுபவர்கள் மிளகாயின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொள்ளலாம். இதற்கு தயிர்பச்சடி காம்பினேஷன் ருசி தரும்.

ராகி - கோதுமை களி - வெண்டை

புளிக்குழம்பு

தேவையானவை:

ராகி மாவு - 3 கிண்ணம், கோதுமை மாவு - 3 கிண்ணம், உப்பு }தேவைக்கேற்ப

செய்முறை : ஒரு கிண்ணம் மாவுக்கு மூன்றுகிண்ணம் நீர் என்ற அளவில் அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்கவும். மாவுகளை நீரில் கட்டியில்லாமல் கரைத்து கொதிக்கும் நீரில் கலந்து கைவிடாமல் நன்கு கிண்டவும் கூடவே தேவையான உப்பையும் சேர்க்கவும். சுமார் அரை மணி நேரம் கழித்து களி கெட்டியாகும் கையில் நீர் தொட்டு ஒட்டாமல் வரும் பதத்தில் அடுப்பை அணைத்து மூடி விடவும். இதே ராகியுடன் வெந்தயத்தை சேர்த்து வெந்தயக் களியும் செய்யலாம்.

ராகி களிக்கு தொட்டுக்கொள்ள வெண்டைக்காய் குழம்பு

தேவையானவை

வெண்டைக்காய் -1/4கிலோ, புளி-100கிராம், தேங்காய்-1 கிண்ணம், தக்காளி - 100 கிராம், சின்ன வெங்காயம் -100 கிராம், வரமிளகாய் - 5, கறிவேப்பிலை- தாளிக்க, வெந்தயம்- சிறிது, மல்லித் தூள் -1தேக்கரண்டி, மிளகாய்த் தூள் -1 தேக்கரண்டி, கடலைப் பருப்பு - சிறிது, மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 150 மில்லி

செய்முறை : சிறிது நல்லெண்ணெய்யில் தேங்காய், கறிவேப்பிலை, மிளகாய், சின்ன வெங்காயம் இவைகளை வதக்கி அரைக்கவும். மீதமுள்ள நல்லெண்ணெய்யை வாணலியில் ஊற்றிக் காய்ந்ததும், கடலைப் பருப்பு தாளித்து வெந்தயம் சேர்த்து நறுக்கி வைத்துள்ள வெண்டைக் காய்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். காய்கள் வதங்கியதும் மல்லித்தூள், மிளகாய்த் தூள் சேர்த்து வதக்கி கரைத்து வைத்துள்ள புளித் தண்ணீரை ஊற்றி வெந்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். காய் வெந்து எண்ணெய்ப் பிரிந்து மேலே வரும்போது இறக்கவும்.

முருங்கைக் கீரை போண்டா

தேவையானவை:

கடலை மாவு - 1 கிண்ணம், குதிரைவாலி அரிசிமாவு -1/2 கிண்ணம், முருங்கைக் கீரை -1/2 கட்டு, வரமிளகாய்-5, பூண்டு - 4 பல், இஞ்சி- சிறு துண்டு, பெருங்காயம் - சிறிது, வெங்காயம் - 2, சோம்பு - சிறிது, உப்பு - தேவைக்கேற்ப, எண்ணெய் - பொரிக்க செய்முறை : கடலைமாவு, அரிசிமாவுடன் இஞ்சி பூண்டு, மிளகாய் அரைத்த விழுதைச் சேர்த்து ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கிய கீரை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு, பெருங்காயம், சோம்பு சேர்த்து சிறிது நீர் விட்டுப் பிசைந்து காய்ந்த எண்ணெய்யில் போண்டாவாக போட்டு சுட்டு எடுக்கவும். இரும்புச்சத்து நிரம்பிய மாலை நேர ஸ்நாக்ஸ் இது.
 - சுபா தியாகராஜன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT