ரசிக்க... ருசிக்க...

குடம்புளியில் செய்ததாக்கும்... குடிச்சுப் பாருங்க செம கூல் மராட்டி ஸ்பெஷல் சம்மர் ட்ரிங்க்!

கஸ்தூரி ராஜேந்திரன்

சம்மர் கூல் ரெஸிப்பிகளெல்லாம் இப்போது நமக்கு ஃபிங்கர் டிப்பில் கிடைத்து விடுகின்றன. எல்லாம் இந்த நெட்டானந்தா தயவில்! அதிலும் கூட என்ன மைனஸ் என்றால்? ஏராளமாகக் கொட்டிக் கிடப்பதால், எதைத் தேர்ந்தெடுப்பது? எதை வீட்டில் செய்து ருசிப்பது? என்று பெருங்குழப்பம் வந்து விடுகிறது நமக்கு. அந்தக் குழப்பங்களை எல்லாம் தாண்டி ஒரு ரெஸிப்பியை நாம் தேர்ந்தெடுக்கிறோம் என்றால் அது அந்த ரெஸிப்பி செய்த தவம் அல்ல... எல்லாம் நாம் செய்த தவப்பயனையும் பொருத்தது தான். ஏனென்றால் அப்படித் தேர்ந்தெடுக்கும் ரெஸிப்பி ஆரோக்யமானதாகவும் இருக்க வேண்டுமே! இதோ, அப்படி ஒரு ரெஸிப்பியைப் பற்றித்தான் இப்போது தெரிந்து கொள்ளவிருக்கிறோம். இது மராத்தி ஸ்பெஷல் ரெஸிப்பி. அங்கு இது இல்லாமல் கிராமத்து விருந்துகள் பூர்ணமடைவதில்லை. உடலுக்கு மிக மிக ஆரோக்யமானது. எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதை நாம் குடம்புளி மற்றூம் தேங்காய்ப்பாலைப் பயன்படுத்தி செய்யவிருக்கிறோம்.

தேவையான பொருட்கள்:

  • துருவிய தேங்காய் : 1 கப்
  • பச்சை மிளகாய் : 1
  • கொத்தமல்லித் தளை : சிறிதளவு
  • பூண்டு நசுக்கியது : 1 டீஸ்பூன்
  • கோக்கம் புளி அல்லது குடம்புளி : 10 முதல் 12 சுளைகள்
  • சீரகப் பொடி : 1/2 டீஸ்பூன்
  • பிளாக் சால்ட் : 1/2 டீஸ்பூன்
  • சால்ட் : தேவைக்கேற்ப கொஞ்சம்

செய்முறை:

1 கப் துருவிய தேங்காயை மிக்ஸியில் எடுத்துக் கொண்டு அதனுடன் 1 கப் கொதிக்கும் தண்ணீரைச் சேர்க்கவும். அடுத்து குடம்புளியை அது மூழ்கும் அளவுக்கு கொஞ்சமாகத்  தண்ணீர் விட்டு அடுப்பில்ஏற்றி சூடாக்கவும். புளி சூடு ஏறி நன்கு மசியும் அளவுக்கு வேக வைக்கப்பட வேண்டும். குடம்புளி கரைந்து தண்ணீரின் நிறம் அடர்த்தியான பிரெளன் நிறத்திற்கு வரும் வரை நன்கு மசித்துக் கொண்டே புளியைக் கிளறி விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்து விட்டு மிக்ஸியில் இருக்கும் தேங்காய்த்துருவலைக் கொதிக்கும் தண்ணீர் கலந்து 2 நிமிடங்களுக்கு அரைக்கவும். பின்னர் அதை ஒரு ஜூஸ் வடிகட்டியின் மீது மெல்லிய துணியைப் போட்டு வடிகட்டி தேங்காய்ப்பால் எடுக்கவும். பின்னர் இதனுடன் காய்ச்சி வடிகட்டிய கெட்டியான குடம்புளிக் கரைசலை ரோஸ் நிறம் கிடைக்கும் வரையில் சிறிது சிறிதாக மிக்ஸ் செய்யவும். பின்னர் அதனுடன் 1/2 டீஸ்பூன் நசுக்கிய பூண்டு மற்றும் நீளவாக்கில் நறுக்கிய 1 பச்சை மிளகாயையும் சேர்க்கவும். அடுத்ததாக 1/2 டீஸ்பூன் பிளாக் சால்ட், ஒரு சிட்டிகை தூள் உப்பு, 1/2 டீஸ்பூன் சீரகத்தூள் என முன்னதாக எடுத்து வைத்த அனைத்துப் பொருட்களையும் சேர்த்து நன்கு கிளறவும். பிறகு அதை அப்படியே எடுத்து ஃப்ரிஜ்ஜில் வைத்து விட்டு தேவையான போது
வடிகட்டி அப்படியே பரிமாறலாம். செம கூல் ரெஸிப்பி இது. மஹாராஷ்டிரத்தில் இது ரொம்ப ஸ்பெஷல் ரெஸிப்பி என்கிறார்கள். சரி தான் நம்மூர் பானகம் மாதிரி தான் இருக்கிறது. ஆனால், இதில் சீமைப்புளிச் சாறுக்குப் பதிலாக குடம்புளிச்சாறும், தேங்காய்ப்பாலும் சேர்க்கிறார்கள் என்பது தான் வித்யாசம்.

குடம்புளி உடல்நலனுக்கு மிகவும் நல்லது. அதனால் யார் வேண்டுமானாலும் தாராளமாக இதை வீட்டிலேயே தயாரித்து அருந்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT