இந்தப் பழங்களை எல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

கொட்டை இல்லாத புளி என்றால் கையில் கரைக்க தேவையில்லை
இந்தப் பழங்களை எல்லாம் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்!

கட்டிப் பெருங்காயம் இறுகிப் போகாமல் நீண்ட நாள் இருக்க வேண்டுமா?

பெருங்காயம் வைத்திருக்கும் டப்பாவில் ஒரு பச்சை மிளகாயைக் காம்பு கிள்ளிப் போட்டு வைக்கவும் இதனால் பெருங்காயத்தை எளிதில் கிள்ளி எடுக்க வரும். இறுகிப்போகாது.

கொட்டை இல்லாத புளி என்றால் கையில் கரைக்க தேவையில்லை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றி வடிகட்டினால் புளி கரைசல் தயார்.

இஞ்சி கெடாமல் ப்ரெஷாக இருக்க ஒரு சின்ன பாத்திரத்தில் மணலை போட்டு அதில் தண்ணீரை ஊற்றவும். அந்த ஈரமணலில் இஞ்சியைப் புதைத்து வைத்தால் நீண்ட நாட்கள் இஞ்சி வாடாமலும், கெடாமலும் இருக்கும்.

சமையலறை டைனிங் ஆகிய இடங்களில் ஈ மொய்த்தால் ஒரு டம்ளர் தண்ணீரில் 2 டீஸ்பூன் உப்பு கலந்து அந்த இடங்களில் தெளித்து விட்டால் ஈ மொய்க்காது.

வாழைத்தண்டை நறுக்கிக் கொண்டிருக்கும்போதே ஆள்காட்டி விரலில் நாரைச் சுற்றிக் கொண்டேயிருந்தால் மோதிரம் போல நார் திரண்டு வந்துவிடும்.

தேயிலைத் தூள் வாங்கி பாட்டிலில் கொட்டி வைக்கும் போதே அதில் இரண்டு ஏலக்காயையும் பொடித்துப் போட்டு கலக்கிவிட்டால் ஏலக்காய் தேநீர் கமகமக்கும்.

நறுக்கியவுடன் காய்கறிகளைச் சமைத்துவிட வேண்டும். அதேபோல பழங்களை நறுக்கியவுடன் சாப்பிட்டுவிட வேண்டும்.

முலாம்பழத்தை பிரிட்ஜில் வைக்கக் கூடாது. அவ்வாறு வைத்தால், முலாம் பழத்தில் இருக்கும் சில சத்துக்களை பழம் இழந்து விடுகிறது. ஆனால், நறுக்கிய முலாம்பழத்தை டப்பாவிலோ பாலிதீன் பையிலோ போட்டு பிரிட்ஜில் வைக்கலாம்.

இதே போல, அன்னாசி, கிவி பழம், மாங்காய் போன்றவற்றையும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com