செய்திகள்

பிரேதப் பரிசோதனை தெரியும், அதென்ன உளவியல் பிரேதப் பரிசோதனை? புராரி கூட்டுத் தற்கொலை வழக்கு ஃபாலோ அப்!

RKV

இந்தியாவை உலுக்கிய புராரி கூட்டுத் தற்கொலை வழக்கில் பிரேதப் பரிசோதனை முடிந்து விட்ட பச்சத்தில் அது குறித்த தகவல்களை அறிக்கையாகப் பெற்றுக் கொண்ட காவல்துறை தற்போது அவ்வழக்கில் உளவியல் பிரேதப் பரிசோதனை அறிக்கை பெற முற்படுவதாக ஊடகச் செய்தி. சிலருக்கு இந்த உளவியல் பரிசோதனை என்றால் என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உளவியல் பிரேதப் பரிசோதனை என்பது தற்கொலை நிகழ்வதற்கு முன்னும், பின்னுமான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு தற்கொலை செய்து கொண்டவர்களின் மனநிலையை ஆராயும் முயற்சி.

இந்தப் பரிசோதனை நிகழ்த்த மொத்தம் 40 வகையான சோதனைகளை உளவியல் மருத்துவர்கள் கையாள்வார்கள். பிரேதப் பரிசோதனையில் இப்படியொரு நூதன முறை 1961 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. சந்தேகத்திற்கிடமான வகையில் நிகழும் மரணங்களை ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய மட்டுமே இத்தகைய அரிதான பிரேதப் பரிசோதனை முறை பின்பற்றப் படுகிறது. இந்தப் பரிசோதனை மூலமாக இறந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை முறை, குணநலன்கள் உள்ளிட்டவை சோதனைக்கு உட்படுத்தப்படும். எளிதாகச் சொல்வதென்றால் அறிவியல் பரிசோதனை, இறந்தவரின் பூர்வீகத்தை ஆராய முற்படும் தொல்லியல் பரிசோதனை மற்றும் இறந்தவர்களின் ரகசிய நடவடிக்கைகளை கருத்தில் எடுத்துக்கொண்டு ஆராய முற்படும் துப்பறிவியல் எனும் பலதரப்பட்ட சோதனைகளின் கூட்டு முயற்சியே இந்த உளவியல் பிரேதப் பரிசோதனை என்று சொன்னால் சரியாக இருக்கும்.

இந்தப் பரிசோதனை வாயிலாக புராரி கூட்டுத் தற்கொலை நிகழ்ந்ததின் பின்னணியை ஓரளவிற்குத் துல்லியமாகக் கணக்கிட விரும்புகிறது காவல்துறை.

உளவியல் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் தெரியும் பட்சத்தில் ஒருவேளை புராரி கூட்டுத்தற்கொலை மர்மத்தின் முடிச்சுகள் அவிழலாம்.

இம்மாதிரியான உளவியல் பிரேதப் பரிசோதனைகள் அனைத்து கொலை மற்றும் தற்கொலை மரணங்களிலும் நிகழ்த்தப்படுவத் வழக்கமல்ல.

இது முற்றிலும் அரிதான பரிசோதனை.

இந்த வழக்கில் இதுவரை 200 க்கும் மேற்பட்டோர் விசாரிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT