வாங்க சிரிக்கலாம்! வீக் எண்ட் ஜோக்ஸ்!

எனக்குச் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவு வருது
வாங்க சிரிக்கலாம்! வீக் எண்ட் ஜோக்ஸ்!

"மன்னா எதிரிகள் நீங்கள் பதுங்கு குழியில் இருப்பதை கண்டுபிடித்துவிட்டார்கள்''
"எப்படி தளபதியாரே...?''
"எல்லாம் கூகுள் மேப் மூலம்தான்''

பி.பரத், கோவிலாம்பூண்டி.

**

காதலன்:  எனக்குச் சாப்பிடும் போதெல்லாம் உன் நினைவு வருது
காதலி:  எனக்குக் கை கழுவும்போதெல்லாம் உங்க நினைப்பு வருது
காதலன்: ?...?...?

டி.மோகனதாஸ், நாகர்கோவில்-1

**

"அவர் ஏன் காரை பின்பக்கமாவே ஓட்டிட்டுப் போறாரு''
"முன்பக்கம் ஓட்டுனா கிலோ மீட்டர் அதிகமா ஓடுமாம்''

அ.செல்வகுமார், சென்னை-19.

**

"உங்க பொண்ணு வீட்டு வேலையெல்லாம் நல்லா பார்ப்பாளா?''
"வீட்டுல யாராவது வேலை செய்தா நல்லா வேடிக்கை பார்ப்பா''

வி.பார்த்தசாரதி,  சென்னை-5.

**
"இப்ப வர்ற எந்தப் படத்தையும் குடும்பத்தோட பார்க்க முடியலை''
"நேத்துக் கூட சினிமாவுக்குப் போயிட்டு வந்தியே?''
"அதுவா?... வேலைக்காரி கூட போயிருந்தேன்''

தீபிகா சாரதி, சென்னை-5.

**

"ஆபரேஷனுக்குப் பிறகு எப்ப டாக்டர் வரும்படி இருக்கும்?''
"நீங்க எப்ப வந்தாலும் எனக்கு வரும்படிதான்''

வி.ரேவதி, தஞ்சை.

**

"டிவியிலே அவர் ஓடிக் கொண்டே செய்தி  வாசிக்கிறாரே?''
"அது விரைவுச்  செய்தியாம்''

கு.அருணாசலம், தென்காசி.


**
மகன்:  என்னது எனக்குப் பார்த்திருக்கிறது ஆர்கானிக் பெண்ணா?
தாய்: ஆமாம். மலைகிராமத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்தவள்

எஸ்.மோகன், கோவில்பட்டி.

**

 "உங்க மனைவிக்கு ஏன் வாயில தையல் போட்டாங்க?''
"வாய் கிழிய பேசினாங்க. அதான்''
என்.சாமிநாதன், பட்டீஸ்வரம்.

**

"வாயைத் திறக்க முடியாமல் அவஸ்தைப்பட்ட உங்க மாமாவை டாக்டர் எப்படி குணப்படுத்தினார்?''
"இந்த வியாதியைக் குணப்படுத்த ரூ.50 ஆயிரம் ஆகும்னு டாக்டர் சொன்னார். தானாகவே வாய் திறந்துகிடுச்சி''
வி.ரேவதி, தஞ்சை.

**

"தலைவர் ஏன் டேபிள்ல காய்கறிகளை குவிச்சு வச்சுக்கிட்டு அங்கேயும் இங்கேயும் நகர்த்துறாரு''
"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
சி.ரகுபதி, போளூர்.

**

"என்னங்க மாப்பிள்ளை உடம்பு முழுக்க ஒரே தழும்பா இருக்கு''
"நான் அப்பவே சொல்லலை. மாப்பிள்ளை வாழ்க்கையில ரொம்ப அடிபட்டவர்ன்னு''
கே.முத்தூஸ், தொண்டி.

**

"அந்த நடிகை ஏன் குளியல் அறை காட்சியில் நடிக்கமாட்டேன்னு சொல்றாங்க?''
"அவங்க இப்ப முழுகாம இருக்காங்களாம்''

**

 "இந்த குக்கரை நாங்க எங்க பாட்டி காலத்துல இருந்து யூஸ் பண்றோம்''
"அப்ப நல்ல ஆவி வந்த குக்கர்ன்னு சொல்லு''

**

"எங்க ஏரியால பயங்கர தண்ணி கஷ்டம்''
"நிஜமாவா?''
"ஆமா... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது''

**

"நீங்க ஏன் பொம்பளை மாதிரி டிவி சீரியலைப் பார்த்து அழறீங்க?''
"இது டிவி சீரியல் இல்லீங்க. என் கல்யாண கேசட்''
வி.சாரதி டேச்சு, சென்னை -5.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com